
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பொருந்துதல்களை மீறியுள்ளதாகவும் அதனால்
அடுத்த வாரம் முதல் பொது பல சேனா ஹலாலுக்கு எதிரான போராட்டத்தை மீண்டும்
ஆரம்பிக்கப்போவதாகவும் சிங்கள இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஹலால் இலச்சினையுடன் கூடிய பொருட்கள் இன்னும் சந்தையில் இருப்பதாகவும்,
இதனால் ஹலால் செயற்பாடுகள் முடியவில்லை எனவும் அதனை நிறுத்துவதற்கான
போராட்டங்களை நடத்தப்போவதாகவும் பொது பல சேனாவின் செயலாளரை ஆதாரம் காட்டி
குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பெளத்த மகா சங்கத்தினர் முன்வந்து ஹலாலை நிறுத்துவதற்கான முயற்சிகளை செய்த
நிலையிலேயே தாம் போராட்டங்களை கைவிட்டதாகவும் இந்நிலையில் ஹலால்
கைவிடப்படாத நிலையில் மீண்டும் போராட்டங்களை தொடரப்போவதாகவும் பொது பல
சேனா தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment