இறுதி யுத்தம் மேற்கொண்டது தமிழீழ விடுதலை புலிகளின் மிலேச்சத்தனத்திற்கு
எதிராகவே அன்றி, அவர்களுடனான வைராக்கித்தினால் அல்லவென ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வைராக்கிய அரசியலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும்
அவர் குறிப்பிட்டுள்ளார். பிலியத்தலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்
கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாங்கள் யுத்தம் செய்தது, விடுதலை புலிகளின் மிலேச்சத்தனத்திற்கு எதிராகவே.
நாட்டை இரண்டாக பிரிப்பதற்று எதிராகவே யுத்தம் செய்தோம். அதனாலேயே நாங்கள்
வெற்றிப்பெற்றோம். வைராக்கிய அரசியல் கூடாது. சிலர் எனக்கு
குழுப்பறிப்பதாக நினைத்து நாட்டிற்கு குழிப்பறிக்கிறார்கள். அதுவே பொது
நலவாய நாடுகளின் அரச தலைவர்களது மாநாட்டை இலங்கையில் நடத்த கூடாது என்று
போடும் கோஷமாகும். இந்த வைராக்கிய அரசியலை இல்லாமல் செய்ய வேண்டும்.
Post a Comment