
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருதில் இயங்கி வந்த அரச சார்பற்ற
நிறுவனமொன்றில் கொள்ளை இடப்பட்ட கணணி இயந்திரங்கள் வீடொன்றில் இருந்து
கல்முனை பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது-16 அஹமட் வீதியில் இயங்கி வந்த முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி
செயல் முன்னணியின அலுவலகம் ; கடந்த 2012.12.11ம் திகதி இரவு
உடைக்கப்பட்டு அங்கிருந்த கணணிகள் உட்பட உபகரணங்கள் பல கொள்ளையிடப்பட்ட
நிலையில் நிறுவனத்தினரால் கல்முனை பொலிஸில் முறைப்பாடு
செய்யப்பட்டிருந்தது.
கொள்ளை இடப்பட்ட பொருட்களின் பெறுமதி இரண்டு இலட்சத்தி ஐம்பத்தாறாயிரம் ரூபா என பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நேற்று முந்தினம் புலன் விசாரணை பிரிவினருக்கு கிடைத்த
தகவலின் அடிப்படையில் இப்பொருட்களை மறைத்து வைத்திருந்த சாய்ந்தமருதை
சேர்ந்த அப்துல் மஜீத் அப்துல் நஸ்பீன் கல்முனை பொலிசாரினால் நேற்று கைது
செய்து விசாரிக்கப்பட்ட போது கொள்ளையிடப்பட்ட பொருட்களுக்களும்
கைப்பற்றப்பட்டுள்ளன.
இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி
வசந்த குமார தலைமையிலான குழுவினர் விசாரணை செய்கின்றனர். கைது செய்யப்பட்ட
நபரும், கைப்பற்றப்பட்ட கணணி உபகரணங்களும் நீதிமன்றில்
ஒப்படைக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
Post a Comment