இலங்கையின் வடக்கு மாகாணசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் தகைமை
உள்ளவர்களுக்கு மட்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆளும்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வாய்ப்பு வழங்கியுள்ளதாக அமைச்சர் சுசில்
பிரேமஜயந்த பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
வடக்கே ஐந்து நிர்வாக மாவட்டங்களுக்குமான வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு
பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் எதிர்வரும் 31-ம் திகதி வேட்புமனுக்கள்
தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் நோக்கோடு பல தரப்பினரும்
முன்வந்திருந்தார்கள். அவர்களில் மிகவும் தகுதிவாய்ந்தவர்களைத் தான்
நாங்கள் தேர்தலில் களமிறக்கத் தீர்மானித்துள்ளோம்' என்றார் சுசில்
பிரேமஜயந்த
யாழ் மாவட்டத்தில் 7 பேரைத் தான் சுதந்திரக்கட்சி களமிறக்குகிறது.
மற்றவர்கள் ஈபிடிபியிலிருந்தும் அகில இலங்கை முஸ்லிம் கட்சியிலிருந்தும்
இடதுசாரி கட்சியிலிருந்தும் போட்டியிடுவார்கள். வெற்றி பெறத்
தகுதியானவர்களைத் தான் சுதந்திரக் கட்சி தேர்ந்தெடுத்திருக்கிறது' என்றும்
அமைச்சர் கூறினார்
Post a Comment