
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கட்சியை விட்டு விலகிச்செல்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கட்சியின் உள்ளகத் தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியின் சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும் என்று அவர் சேகுதாவூத் வலியுறுத்தி வந்தார்.
எனினும் அதனை செவிமடுக்காத கட்சியின் தலைமை, மாகாணசபைத் தேர்தலில் கட்சி தனித்து போட்டியிடும் என்ற தீர்மானத்தை எடுத்துள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் 5ம் திகதியன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் கூடி நிலைமைகளை ஆராயவுள்ளது.
Post a Comment