பதுளை மாவட்டத்தில் ஹாலிஎல தேர்தல் தொகுதியில், ஹாலிஎல பிரதேச சபை
மைதானத்தில் இடம்பெற்ற மாபெரும் இப்தார் நிகழ்வில் அமைச்சர் டிலான் பெரேரா
கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த போது,
அமெரிக்கா போன்ற நாடுகள் உலகிலுள்ள முஸ்லிக்களையும், இஸ்லாம் பரவுவதையும்
தடுத்து நிறுத்த வேண்டி பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த
வகையில் இலங்கை விவகாரத்தை ஜெனிவாவில் கொண்டுவந்து இலங்கையை மண்டியிட செய்ய
மேற்கொண்ட முயற்சியை எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்
புத்திசாதுரியத்தால் கையாண்டார். அதனால் இலங்கையை அமெரிக்காவிடம் மண்டியிட
வைக்க முடியவில்லை. அந்த வகையில் பொதுபலசேனா ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாத
காலத்தில் பொதுபல சேனா முக்கிய உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு ஒருமாத கால
சுற்றுபிரயாணம் ஒன்றை மேற்கொண்டனர்.
அமெரிக்காவிற்கு செல்வதற்கு ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா மட்டிலும் செலவாகும்
பருவச்சீட்டில் சுமார் 24 மணித்தியாலங்கள் பயணிக்கவேண்டிய பயணத்தை
மேற்கொண்டு அமெரிக்காவிற்கு சென்று அங்கிருந்து சில தூண்டுதல்களையும்,
வேண்டுகோள்களையும் அள்ளிக் கொண்டு இலங்கைக்கு வந்தனர். இலங்கையில் பேரினவாத
பயங்கரவாத செயற்பாடுகள் முடிவுக்கு வந்து அனைத்து இனங்களும் ஒன்றாக
வாழக்கூடிய சூழ்நிலையில் தற்போது மீண்டும் சிங்கள பிரபாகரன்கள் ஆங்காங்கே
கூக்குரலிடுவதை தற்போது கேற்க முடிகிறது. பிரபாகரன் பெயர் தமிழில் இருந்த
படியால் அவர் தமிழராக இருந்தார். ஆனால் இன்று பொதுபல சேனா இயக்கத்தினரும்
பிரபாகரனை போன்று பிரிவினைவாத இனவாத பயங்கரவாதத்தை மேற்கொண்டுள்ளனர்.
இவர்களின் கூக்குரல், சண்டித்தனம் போலியானவை. இதற்கு நாம் ஒரு போதும்
இடமளியோம்.
பதுளை மாவட்டத்தில் எனது ஹாலிஎல தேர்தல் தொகுதியில் பொதுபல சேனாவின்
எந்தவொரு செய்ற்பாடையும் மேற்கொள் அனுமதிக்கக்மாட்டேன். இங்குள்ள
விஹாரைகளுக்கு தற்போது இவர்கள் சென்று வருவதாக கேள்விபடுகின்றேன்.
இவர்களின் இந்த முயற்சி புத்தர் காட்டிய வழியல்ல. அவர்களின் கலபொடஅத்தே
ஞானசாரரின் கொள்கை அவை எமது புத்த தர்மத்தில் இன்னுமொரு சமயத்தை மிதித்து,
இன்னுமொரு இனத்தை ஒழித்து நாம் மேலோங்க எங்கும் வழிகாட்டப்படவில்லை. புத்த
பெருமான் கூடுதலாக ஜேதவனாராமையில் வழிப்பட்டும், தியானமும், போதனைகளையும்
மேற்கொண்டார். ஆனால் அதற்கு அருகாமையில் இறைச்சி கடைகள் இருந்தன. பௌத்த
சமயம் மாமிசத்தை விரும்பாத ஒரு சமயம். இருந்த போதும் புத்தர் போதனைகளின்
பின் நீங்கள் சென்று அருகிலுள்ள இறைச்சி கடைகளை தீவைத்து எறித்து அவைகளை
தூக்கி வீசவும், என்று கட்டளையிடவில்லை. ஆனால் இன்று புத்தரின்
அகிம்சாவாதமத கொள்கையை விட்டுவிட்டு அந்த அத்த, இந்த அத்த கொள்கைகளை
பிரசாரம் செய்து வருகின்றனர்.
ஜெனிவா பிரச்சினையின் போது எமக்கு முஸ்லிம் நாடுகளே கரம் நீட்டி
கைகொடுத்தனர். அதற்காக நாம் முஸ்லிம் நாடுகளுக்கு கட்டுப்படவேண்டியுள்ளது.
சரிஆ சட்டம் இறைவனின் சட்டம். அதனை மனிதர்களால் மாற்ற முடியாது என்பதை
இஸ்லாமியர்களின் கொள்கை. முஸ்லிம் நாடுகளும் அதனை பின்பற்றுகின்றனர்.
ரிஸானா நபிகின் விடயத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால்
அவையாவும் சரிஆ ட்டத்திற்கு ஒத்துவரவில்லை. அதனால் அந்த முயற்சிகள் தோல்வி
கண்டனர். அதன் வேதனை எனக்கு உண்டு.
ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ரன்ஜன் ராமநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் சரிஆ
சட்டத்தையும், முஸ்லிம் நாடுகளையும் விமர்சிக்கின்றார். நாம் ரிஸானா
நபிக்கின் வீடு அமைந்துள்ள கிராமத்திற்கு சென்றேன். அங்கு அமைந்திருந்த
பள்ளிவாசலுக்கு என்னை அழைத்து சென்றார்கள். அந்த பள்ளிவாசல்
நிர்மாணிக்கப்பட்டு பணிகள் பூர்த்தியாகாத நிலையில் இருந்தன. அதன் போது நான்
கேட்டேன் முக்கிய தேவை என்ன வென்று. அவர்கள் கூறினார்கள் பள்ளிவாசலுக்கு
கீழே பளிங்கு கற்கள் (டயில்ஸ்) பிடிக்க வேண்டுமென்று. உடனே அதனை நான்
செய்து தர பொறுப்பேற்றுகொண்டேன். அதன் பின் ரிஸானா நபிக்கின் வீட்டிற்கு
சென்றோம். என்னுடன் வந்த மௌலவி ஒருவர் ரிஸானா நபிக்கின் தாயாரிடம் கூறினார்
அமைச்சர் எமது பள்ளிவாசல் தரைக்கு டயில் பிடித்து தருவதாக. உடனே ரிஸானா
நபிக்கின் தாயார் இரு கரங்களையும் மேலே ஏந்தி இறைவனிடம் பிரார்த்தனை
புரிந்தார். அவர் கூறினார் ரிஸானா நபிக் மீண்டும் திரும்பி வந்திருந்தாள்
நான் இந்த பள்ளிவாசலுக்கு டயில் பிடித்து தருவதாக காணிக்கை வைத்திருந்தாக
தெரிவித்தார். அந்த காணிக்கை நிறைவேறிவிட்டது என கண்ணீர் விட்டார்.
பாருங்கள் இறைவனின் நாட்டம் ரிஸானா நபிக்கின் தாயாரின் தேவையை உங்களின்
இறைவன் எனது மனதிற்குள் போட்டு நிறைவேற்ற வைத்துள்ளார். இதுதான் கூறுவது
இறைவனின் செயல்கள் என்று.
முஸ்லிம் பிள்ளைகள் சட்ட கல்லூரி பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளை
பெற்று சட்ட கல்லூரிக்கு தெரிவாகினார்கள். இதன் போது அதற்கு பொறுப்பாகவுள்ள
அமைச்சர் ரவுப் ஹகீம் ஒரு முஸ்லிம் என்ற காரணத்தினால் முஸ்லிம்
மாணவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் சலுகை காட்டப்பட்டுள்ளது என தெரிவித்து
களுத்துரை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா
தான் முதலில் அதனை கேள்விக்கு உட்படுத்தினார். அதனையடுத்து பொதுபல
சேனாவினர் சட்ட கல்லூரி அதிபரை கழுத்தால் பிடித்துக் கொண்டு
ஆர்ப்பாட்டங்களையும், ஊர்வலங்களையும் மேற்கொண்டனர். இந்த நாட்டில்
மீண்டுமொரு இனவாத பயங்கரவாதத்தை உருவாக்க இடமளிக்க முடியாது இதற்கு முன்பு
இந்த மைதானத்தில் எனது அரசியல் பயணத்தை ஆசிப்பெறுவதற்காக பௌத்த மத
வழிபாடொன்றை மேற்கொண்டேன். அதனையடுத்து சிந்தித்தேன். ஏன் முஸ்லிம்களின்
இப்தார் நிகழ்வொன்றை மேற்கொள்ள முடியாதென்று. அந்த வகையில் இன்று இங்கு
மாபெறும் இப்தார் நிகழ்வை நாம் ஏற்பாடு செய்துள்ளோம். இங்கு சிங்கள, தமிழ்,
கிறித்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். இந்த முன்மாதிரி முழு
நாட்டிலும் கொண்டு செல்லப்பட வேண்டும். ஹாலிஎலயில் வழங்கப்பட்டுள்ள
முன்மாதிரி ஏனைய இடங்களிலும் மேற்கொள்வார் என எதிர்பார்க்கின்றேன்
என்றார்.
இந்த நிகழ்வை அமைச்சர் டிலான் பெரேரா ஊவா மாகாண சபை உறுப்பினர்களான நிமல்
ரத்நாயக்க, மானெல் ரத்நாயக்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பௌத்த, இந்து,
கத்தோலிக்க மதகுருமார்கள் என 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த இப்தார் நிகழ்வை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஏற்பாடு செய்திருந்தது.

Post a Comment