
மீள்குடியேற்றக் கிராமமான நாவலடி பிரதேசத்திலுள்ள மஸ்ஜிதுல் அந்நூர்
பள்ளிவாசல் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாதோரால்
உடைக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளிவாசல் மட்டக்களப்பு- கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இஷா தொழுகை முடிந்ததுடன், இரவு 9 மணியளவில்
பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளது. பள்ளிவாசலில் கடமைசெய்பவர் நேற்று அதிகாலை
தொழுகைக்காக காலை 04 மணியளவில் பள்ளிவாயலுக்கு வந்தபோது பள்ளிவாயல் உடைத்து
காணப்பட்டுள்ளது.
பள்ளிவாயலில் உள்ள இரண்டு உண்டியல்களும் உடைக்கப்பட்டு பணம்
எடுக்கப்பட்டுள்ளதுடன் அலுமாரி உடைக்கப்பட்டு அதனுள் இருந்த பொருட்கள்
வெளியே எறியப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Post a Comment