மஹியங்களை
பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், அங்கு பன்றியின் இரத்தம்
ஓட்டப்பட்டமை, மற்றும் அச்சுறுத்தல் காரணமாக அப்பள்ளிவாசலில் தொழுகைகள்
இடைநிறுத்தப்பட்டு, தற்போது பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளமை குறித்து
நறைவேற்று அதிகாரம் பொருந்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் கவனத்திற்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அமைச்சர் நிமால் சிறிபால் டீ.சில்வா, மூத்த அமைச்சர் பௌஸி, மேல் மாகாண
ஆளுநர் அலவி மௌலானா ஆகியோர் ஜனாதிபதியின் கவனத்திற்கு இந்த விகாரத்தை
கொண்டு சென்றுள்ளதாகவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.
அத்துடன் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்திலும்
மஹியங்கனை பள்ளிவாசல் விவகாரம் குறித்து பேசப்பட்டதாகவும் மேலும்
தெரியவருகிறது.
Post a Comment