Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2014ம் ஆண்டு மார்ச்சில்?

Tuesday, July 230 comments

பாராளுமன்ற பொதுத்தேர்தல் ஏதிர்வரும் 2014ம் ஆண்டு மார்ச் மாதமளவில் நடைபெறலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் ஆறு வருடங்களாக இருக்கின்ற நிலையில் முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு அரச உயர்மட்டம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. கடைசியாக பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2010ம் ஆண்டு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுவதன் மூலம் அரசாங்கத்தின் ஆதரவை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ளலாம் என நம்பப்படுகின்றது. மஹி;ந்த ராஜபக்ஸ அரசாங்கம் பல தேர்தல்களை முன்கூட்டியே நடத்தி அதில் வெற்றியும் பெற்றிருப்பதும் கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.

தேர்தல் அடுத்தவ வருட முற்பகுதியில் நடைபெறலாம் என கதைகள் கசிந்து வருவதால் கூடுதலான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பயம் பிடித்துள்ளதாம். வெற்றிபெற்றதும் மக்களைத் திரும்பிப் பார்க்காமல் உல்லாசமாக வலம்வந்தவர்கள் மீண்டும் வாக்குப்பெற மக்கள் காலடியில் வரவேண்டும் என்கின்ற மனபயம் பிடித்துள்ளது.

தேர்தல் என்றால் பணம்தான் என்கின்ற நிலையில் அந்தப் பணத்தை எப்படிப் பெறலாம் என்ற சிந்தனையிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓடித்திரிகி;ன்றனராம்.

பாராளுமன்ற பொதுத்தேர்தல் வரட்டும் எம்.பி. மாருக்கு பாடம் படிப்பிப்போம் என்று காத்திருந்த அம்பாரை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு தேர்தல் வருமாம் என்ற செய்தி மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

கல்முனைத் தொகுதியிலும் பொத்துவில் தொகுதியிலும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய வெண்டும் என்கின்ற சிந்தனைல் அதற்கான வேலைகள் இப்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

கிழக்கு மாகாணசபையில் உள்ள இளம் உறுப்பினர்கள் இருவர் பாராளுமன்றத் தேர்தல்கள் தொடர்பாக ஹோட்டலொன்றில் அரசியலில் நீண்ட அனுபவத்தையும், ஆளுமையையும் கொண்ட ஒருவருடன் கலந்துரையாடியதாகவும் கதைகள் கசியப்பட்டுள்ளது.

தேர்தல் முன்கூட்டியே நடக்குமா? அவ்வாறு நடந்தால் இப்போதைய எம்.பி.க்களின் நிலை என்ன புதுமுகங்கள் யார் என்பது பற்றியெல்லாம் தொடர்ந்தும் களம் பெஸ்ட் ஆராயும்
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by