
நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு மேற்கொள்ளும் “13′ திருத்தம் உள்ளிட்ட
எந்தவொரு முயற்சியிலும் அரசு முன்வைத்த காலைப் பின்வைக்கப் போவதில்லை.
நாங்கள் நினைத்ததை முடித்தே தீருவோம். இதனைத் தெட்டத் தெளிவாக
இந்தியாவுக்கும் தெரிவித்து விட்டோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ TNA
தலைவர் இரா.சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் நடைபெறும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்..
“தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விடயத்தில் இலங்கை அரசு அக்கறையாகவே இருக்கின்றது. எனினும் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவுக்கு வராமல் தமிழ்க் கூட்டமைப்பு வெளியில் இருந்து கொண்டு அரசைக் குறை கூறுவது அர்த்தமற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தெரிவுக்குழுவுக்கு வரச்செய்வதற்கான அழுத்தங்களையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு இந்தியாவிடமும் வலியுறுத்தியுள்ளோம். தமிழர் பிரச்சினைத் தீர்வில் பொறுப்புடன் செயற்பட வேண்டிய கடப்பாடு தமிழ்க்கூட்டமைப்புக்கும் உண்டு.
நாட்டுக்கு நன்மையான விடயங்களைச் செய்வதில் எப்போதும் எனது அரசு பின்நிற்கப் போவதில்லை. “13′ஆவது திருத்தத்தில் உள்ள பொலிஸ், காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே “13′ ஐ திருத்தும் விடயத்தில் ஒருபோதும் நாங்கள் பின்வாங்கப் போவதில்லை” என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment