மாளிகாவத்தையில் சேரிபுற வீடுகளில் வாழ்கின்றவர்களை புதிய வீடுகளில்
குடியமர்த்துவதற்கான திகதியை உரியமுறையில் தீர்மானிக்கும் வரை அவர்களின்
பழைய வீடுகளை உடைக்கவேண்டாம் என்று உயர் நீதிமன்றம் பணித்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கே உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு நேற்று வெள்ளிக்கிழமை பணித்துள்ளது.
மாளிகாவத்தையில் சேரிபுற வீடுகளில் வாழ்கின்றவர்களில் 25 பேர்,
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை
உயர்நீதிமன்றம் நேற்று மீண்டும் ஆராய்ந்த போதே மேற்கண்டவாறு பணித்துள்ளது.
இந்த மனு, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான மூன்று நீதியரசர்கள் குழு முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆராயப்பட்டது.
Post a Comment