கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரும் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 6.8ஆக காணப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கின்றபோதும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 8.3ஆக காணப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சத சில்வா தெரிவித்தார்.
கடன் பெறுவது தொடர்பான அறிக்கை ஜூன் மாதம் 30ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஹர்சத சில்வா குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் அந்த அறிக்கையை சமர்ப்பிப்பதை தவிர்ப்பதற்கு அரசு முயற்சிப்பதாகவும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும் ஹர்சத சில்வா கூறினார்.
Post a Comment