Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

சமூகத்துக்கு துணிச்சலோடு செயலாற்றியவர் அசாத் சாலி

Friday, May 30 comments

சமூகத்துக்கு துணிச்சலோடு செயலாற்றியவர் அசாத் சாலி. - முஸ்லிம் சமுக நலன்புரிச் சங்கம்.

அஸாத் சாலி கைது முஸ்லிம் சமூகத்தின் குரல்வளையை நசுக்க முயற்சி.

எந்த விதமான பட்டம் பதவிகளையும் எதிர்ப்பார்க்காமல் சமூகம் ஒன்றை மட்டுமே கருத்திற் கொண்டு துணிச்சலோடு செயலாற்றும் அரசியல்வாதியே அஸாத் சாலி என்பதை இந்த நாடே நன்கு அறியும்.

அஸாத் சாலி ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்திருந்தால் இன்று அவர்தான் கொழும்பு மாநகர மேயர். அதை யாரும் தடுத்திருக்க முடியாது. முஸ்லிம்களுக்கு விரோதமாகப் பேசிய சரத் பொன்சேகாவை ஐ.தே.க ஆதரிக்க முன்வந்த ஒரே காரணத்துக்காகத் தான் அவர் அங்கிருந்து வெளியேறினார்.

அதன் பிறகு அவர் மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் போக்கால் கவரப்பட்டு அவருக்கு ஆதரவளித்தார். ஆனால் காலப்போக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசில் தலைவிரித்து ஆடத் தொடங்கியது. பட்டம் பதவிகளைப் பற்றி யோசிக்காத அஸாத் சாலி இதை நேரடியாக எதிர்க்கத் தொடங்கினார். குறிப்பாக தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட ஒரு நாளைக்கு முன்னதாகவே அது பற்றி அஸாத் சாலிக்கு தகவல் கிடைத்தது.

அதை அவர் உடனடியாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நடைபெறவுள்ள அசம்பாவிதத்தை தடுக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கையை எடுக்காமல் பாரிய அசம்பாவிதம் இடம்பெற வழிவிட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த அஸாத் சாலி ஜனாதிபதியை நேரடியாகச் சந்தித்து தனது அதிருப்தியை தெரிவித்து விட்டு அவருக்கு வழங்கிவந்த ஆதரவையும் விலக்கிக் கொண்டார்.

பின்னர் முஸ்லிம் காங்கிரஸுடன் சேர்ந்து அதனூடாக முஸ்லிம்களின் குரலை பலப்படுத்த முயன்றார். ஆனால் பட்டம் பதவிகளின் மோகத்திலும்;;, பகட்டிலும், டாம்பீகத்திலும், துரோகத்திலும் ஊறிப்போயுள்ள முஸ்லிம் காங்கிரஸின் சிந்தனைகளுக்கும், சமூக உணர்வில் ஊறிப்போன தனது சிந்தனைகளுக்கும் இடையிலான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இடையிலானது என்பதை வெகு விரைவில் அவர் புரிந்து கொண்டதால் அங்கிருந்தும் வெளியேற வேண்டியதாயிற்று.

அதன் பிறகு தனித்து நின்று முஸ்லிம் சமூகத்துக்கு குரல் கொடுக்கும் பணியை தானே வலிந்து, துணிந்து ஏற்றுக் கொண்டார் அஸாத் சாலி. இந்தக் காலப்பகுதியில் தான் இந்த நாட்டில் முஸ்லிம்கள் இதுவரை எதிர்நோக்காத புதிய பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. அரச அனுசரணையுடனேயே இவை அனைத்தும் அரங்கேற்றப்பட்டமையும், இவற்றைக் கண்டும் காணாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது பதவி நாற்காலி ஒன்றே குறியென்று செயற்பட்டமையும், இந்தக் காலப்பகுதியில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் கொட்டாவி விடவும் சாப்பிடவும் மட்டுமே வாய் திறந்தமையும், ஏனைய சந்தர்ப்பங்களில்;, தமது வாய்களைத் திறந்த போதெல்லாம் முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுக்கும் வகையில் வார்த்தைகளை உதிர்த்தமையும்; முஸ்லிம்களை பெரும் வேதனைக்கு உள்ளாக்கியது.

முஸ்லிம் சமூகத்துக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் கிடைத்த ஒரே ஆறுதல் அஸாத் சாலி என்ற இந்த கம்பீரமான ஆண்மகனின் குரல்தான். முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை அதன் தேவைகளை துணிச்சலோடு முன்வைக்கக் கூடிய புதிய களம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் வாராந்தம் தனது கருத்துக்களை அவர் துணிச்சலோடு வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக உள்ளுர் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு மட்டுமன்றி அரசாங்கத்துக்கும் அவர் சிம்ம சொப்பனமானார்.

அரசு அவரை மௌனிக்க வைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டது. அனால் அது முடியவில்லை. கடைசியில்; முஸ்லிம் சமுகத்தின் மீதான அச்சுறுத்தல் அடக்குமுறை என்பனவற்றை இந்த நாடும் உலகமும் அறிந்து கொள்ளாமல் இருப்பதற்கு ஒரே வழி அவரைக் கைது செய்து உள்ளே வைப்பதுதான் என்ற முடிவுக்கு இந்த அரசு வந்துள்ளது.

அதன் எதிரொலிதான் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி, யார் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்தார்கள் என்ற விவரமும் தரப்படாமல் வெறுமனே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்கின்றோம் என்ற அறிவித்தலோடு மட்டும் இரகசிய பொலிஸார் அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

முஸ்லிம் சமூகத்தின் கௌரவத்தையும் நன்மையையும் மட்டுமே கருத்திற் கொண்டு துணிச்சலோடு ஒலித்து வந்த இந்தக் குரலை அடக்குவதற்கு இரும்புக் கரங்கள்; பிரயோகிக்கப்படுகின்றன. இதை தடுத்து நிறுத்துமாறு அரசை வலியுறுத்தும் தார்மீகக் கடமை முஸ்லிம் சமூகத்துக்கு உள்ளது. அதை இந்த சமூகம் செய்யுமா?

Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by