பொலிஸ் தலைமையகத்தின் 4ஆம் மாடியில்
தடுத்து வைக்கப்பட்டுள்ள அஸாத் சாலி வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட மதிய
உணவை சாப்பிடாமலும் தண்ணீர் அருந்தாமலும் மறுத்துள்ளதாக அங்கிருந்து வரும்
தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது கைது அநீதியாதென்று கூறியே இவ்வாறு உணவு
தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நீரிழிவு நோயாளியான அஸாத் சாலி உணவு
தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதால் அவரது உடல்நிலை மோசமடைந்ததால்
குடும்பத்தினரினதும், அவரது சட்டத்தரணிகளினதும் கோரிக்கையின் பேரில்
கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கொழும்பு வைத்தியசாலையில் அஸாத் சாலி
தொடர்ந்து சிகிச்சை பெறவேண்டுமென வைத்தியர்கள் அறிவுறுத்திய நிலையிலும்
குற்றப் புலனாய்வு பொலிஸார் அவரை மீண்டும் 4ஆம் மாடிக்கு கொண்டுவந்து
விசாரணை நடத்துகின்றனர்.

Post a Comment