Homeதலை கொடுத்த தளபதியாம் ஆஸாத் சாலி
தலை கொடுத்த தளபதியாம் ஆஸாத் சாலி
பெறுப்புள்ள தலைமைகள் வாய்கள் பொத்தி
பொந்துக்குள் எலிகளெனப் புகுந்த வேளை
இறுக்கமுடன் சமூகத்திற்காய் குரல் எழுப்பி
இனவாத சக்திகளின் முகத்தின் திரையை
அறுத்தெடுத்த நம் தலைவன் ஆஸாத் சாலி
அரசாங்கத் தரப்பினரால் கைதி ஆனான்.
பொறுக்காமல் உளம் நொந்து புலம்புகின்றோம்.
போதுமினி அராஜகங்கள் ஒழிய வேண்டும்.
எம்மினத்துப் பெண்களது பர்தா முறையை
எழிலான மார்க்கத்து ஹலால் வழியை
நம்பிக்கை கொண்டவரின் இறையில்லத்தை
நசுக்கிடத்தான் முயற்சித்தார் பொதுபல சேனா
சும்மாதான் கிடக்கையிலே தலைவர் எல்லாம்
சுனாமியென எழுந்தவன்தான் ஆஸாத் சாலி.
வம்புக்கு வந்தவரை அழைத் தெடுத்து
வளையாது விளக்கத்தைச் சொல்லி வைத்தான்.
தலைவரெனச் சொன்னவர்கள் தயங்கி நின்று
தலை சொறிந்து தன் மானம் இழந்த வேளை
தலை கொடுத்த தளபதியாம் ஆஸாத் சாலி
தைரியத்தை சமூகம் இன்னும் மறக்க வில்லை
விலையேதும்; கொடுத்தேனும் மீட் டெடுக்க
விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அலையெனவே திரளுகின்ற மக்க ளெல்லாம்
அல்லாஹ்விடம் இருகரத்தை ஏந்த வேண்டும்
Post a Comment