கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு முன்னாள் மேயர் ஆஸாத் சாலிக்கு ஆதரவாக நாளை வெள்ளிக்கிழமை, ஜும்ஆ தொழுகைக்கு பின்னர், தெவட்டஹகா பள்ளிவாசலுக்கு அருகில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயகத்தை நேசிக்கும் சக்திகள் பெருமளவு கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கள, தமிழ் தலைவர்களும் இதில் பங்கேற்பார்களென எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸாத் சாலியை ஊடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியும், ஆஸாத் சாலிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்துவதுமே இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கமென நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Post a Comment