தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச்
செயலாளரும் முன்னாள் கொழும்பு மாநகர பிரதி மேயருமான அஸாத் சாலி வியாழன்
காலை இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 72 மணி நேர
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தேவையெனில் அது நீடிக்கப்படலாம்
என்றும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்தனர்.
கொலன்னாவையிலுள்ள அவரது நண்பனொருவரின்
வீட்டில் தலைமறைவாகியிருந்த போதே இரகசியப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற
இரகசியத் தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலன்னாவையிலுள்ள அவரது நண்பரின் வீடு
நேற்று அதிகாலை முதல் பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டது. அருகிலிருந்த
வீதியும் மூடப்பட்டிருந்தது. ஆயுதம் தரித்த பொலிஸார் வீதிகளில்
காணப்பட்டனர். சரியாக 6.45 மணியளவில் நண்பரின் வீட்டிலிருக்கையில்
அஸாத்சாலி குற்றப் புலனாய்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு அழைத்துச்
செல்லப்பட்டுள்ளார்.
இவர் கைதாகியமை குறித்து அவரது மனைவியிடம்
சி.ஐ.டியினர் பற்றுச் சீட்டொன்றினை வழங்கியுள்ளனர். இதன்படி பயங்கரவாதத்
தடைச் சட்டத்தின் 120ஆவது ஷரத்தின் படி அஸாத் சாலி கைது
செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட வேளை இரகசியப் பொலிஸார் அவரை மிகவும் மரியாதையுடனேயே அழைத்துச் சென்றுள்ளனர். இன்ன காரணத்துக்காகவே உங்களை கைது செய்கிறோம் என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட வேளை இரகசியப் பொலிஸார் அவரை மிகவும் மரியாதையுடனேயே அழைத்துச் சென்றுள்ளனர். இன்ன காரணத்துக்காகவே உங்களை கைது செய்கிறோம் என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றப் புலனாய்வுப் பிரிவின்
தலைமையகத்துக்கே அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அவரை
விசாரித்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்த்தன
தெரிவித்தார். விசாரணைக்காகவே அவரை அழைத்துச் செல்கிறோம். அவரைப்
பார்வையிடுவதற்கு உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவோம் என்றும் சி.ஐ.டி.
அதிகாரிகள் அஸாத் சாலியின் மனைவியிடம் தெரிவித்துள்ளனர்.

Post a Comment