இலங்கையில் தான் பாதுகாப்பாக வாழமுடியாது என கொழும்பு மாநகரசபையின்
முன்னாள் பிரதி முதல்வரும், முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவருமான
அசாத் சாலி, தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்க தூதுவருக்கும் அசாத்சாலிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று
இடம்பெற்றது. அதன் போதே இலங்கையில் தான் வாழ்வதற்கு பாதுகாப்பு இல்லை என
அமெரிக்க தூதரிடம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும், அரசாங்கம் தமக்கு உரிய பாதுகாப்பை வழங்க தவறிவிட்டதாகவும்
இந்த விடயம் தொடர்பில் இஸ்லாமிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை
நடத்தவிருப்பதாகவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, மேலும்
இரண்டு அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகளை தாக்கல் செய்யவிருப்பதாகவும்
அவர் அமெரிக்க தூதரிடம் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து வெளிவரும் சஞ்சிகை ஒன்றிற்கு கருத்துத்
தெரிவித்திருந்தமை தொடர்பில் அண்மையில் அசாத்சாலி கைது செய்யப்பட்டு
விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment