அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு,
முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் தங்களது உதவியினை கோறல்
1990 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில்
இருந்து பலாத்காரமாக முஸ்லிம்கள் என்ற காரணத்தினால் எமது மக்கள்
வெளியேற்றப்பட்டு இன்றுடன் 22 வருடங்கள் கழிந்துள்ள நிலையில்,இன்னும்
அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழக் கூடிய நிலையினையே இம்மாவட்டத்தில்
எமக்கு ஏற்பட்டுள்ளது.
பயங்கரவாதம்
இந்த மாவ
ட்டத்தில் ஏற்படுத்திய அழிவுகள் மற்றும் இயற்னை அனர்த்தங்கள்
என்பனவற்றாலும் எமது மாவட்ட மக்கள் பெரும் சிரமங்களுக்கே முகம் கொடுத்து
வந்துள்ளனர்.இந்த அழிவுகளின் இழப்புக்களை நிவர்த்தி செய்வது என்பது நீண்ட
கால திட்டமிடல் மூலம் மற்றுமே முடியுமானது.
இவ்வாறான அடிப்படை காரணங்களுக்கு மத்தியில்
22 வருட அகதி வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைத்து மீண்டும் எமது
மாவட்டத்தில் எமது மக்கள் கௌரவமாக மீள்குடியேற வருகின்ற போது எமது
மக்களுக்கு எதிராக பல தரப்புக்களின் செயற்பாடுகள் மீண்டும் மன வேதனையினை
எற்படுத்திவருகின்றது.யுத்தம் ஒய்ந்து மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற
வகையில் தங்களது தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ள
வேலைத்திட்டங்களுக்கு சிலர் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.கடந்த 2010 ஆம்
ஆண்டு முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்கள்
இன்று வரை இந்த மாவட்டத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக அதிகாரிகளினால்
நோக்கப்படுகின்ற நிலையினையே காணப்படுகின்றது.
இதன் பின்னணியில் செயற்படுபவர்கள் ஒரு
இனத்துக்கு மட்டும் எல்லாம் வழங்கப்பட வேண்டும் வேறு இனத்தை சார்ந்தவர்கள்
இங்கு இருக்க கூடாது என்ற அடிப்படைவாத சிந்தனையும்,பிரிவினைவாத போக்கும்
இருப்பதை வெளிப்படையாக அறிந்து கொள்ளமுடிகின்றது.முல்லைத்தீவிலிருந்து
வெளியேற்றப்பட்ட எமது முஸ்லிம் மக்கள் மீள வந்து தமது பிரதேசங்களில்
மீள்குடியேற முனைகின்ற போது, இம்மக்களை பிற மாவட்ட மக்கள் என்று இனம்
காட்டி எமது மக்களது உரிமைகளை தருவதற்கு மறுக்கும் பணிகளும் இங்கு இடம்
பெறுகின்றதை உங்களது கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம்.
இஸ்லாம் மதம் என்பது சகலரது மத
விழுமியங்களுக்கும்,கலாச்சாரத்துக்கும் இடையூறு விளைவிக்காத மதம் என்பதால்
பொறுமையினைக் கொண்டு எமது முயற்சிகளை நாம்
முன்டுத்துவருகின்றோம்.இவ்வாறானதொரு நிலையில் முல்லை மாவட்டத்தில் ஏற்கனவே
நாம் வாழ்ந்த இடங்களில் வேறு பல குடியேற்றங்களும் ஏற்படுத்தப்பட்டதால் எமது
மக்களுக்கு தேவையான காணிகளை அப்பிரதேசங்களில் பெற்றுக் கொள்ளமுடியாத
நிலையும் தற்போது காணப்படுகின்றது.இந்த நிலையில் முள்ளியாவலை பிரதேசத்தில்
இனம் காணப்பட்ட வனபரிபாலன திணைக்களத்துக்கு சொந்தமான காணியினை எமது
மக்களின் மீள்குடியேற்றத்திற்காக அடையாளப்படுத்தப்பட்டு இது குறித்து வனவள
திணைக்களத்தினால் இக்காணி பிரதேச செயலாளருக்கு பாரப்படுத்தப்பட்டுள்ள
நிலையில்,அக்காணியினை வழங்குவதில் ஏற்படுத்தப்பட்டுவரும் தாமதமானது எமது
மக்களை இம்மாவட்டத்தில் இருந்து வெளியேற்ற எடுக்கும் நடவடிக்கையென்பதில்
வேறு கருத்துக்களுக்கு இடமில்லை என்பதை எம்மால் புரிந்து கொள்ள
முடிகின்றது.
இவ்வாறான பின்னணியில் முஸ்லிம்களை
மீள்குடியேற்ற வேண்டும் என்ற உங்களது பேச்சுக்கள் இம்மாவட்டத்தில் நடை
முறைக்கு வராமல் இருப்பது என்பது மீண்டும் இம்மாவட்டத்தில் அசாதாரண
சூழலுக்கு வித்திடும் வேலைத்திட்டங்கள் இடம் பெறுகின்றதா என்ற கேள்வியினை
எழுப்பியுள்ளது.தற்போது 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்
குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற பதிவுகளை செய்துள்ள
போதும்,அது குறித்து எவ்வித ஆக்க பூர்வமான நடவடிக்கைகளும் அரச
அதிகரிகாரிகளினால் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
இந்த நிலை தொடர்வதற்கு
தெரிவிக்கப்பட்டுவரும் காரணங்கள் பாதுகாப்பு தரப்பி்னர் இந்த முள்ளியாவலை
காணியினை வழங்குவதற்கு தடை விதித்துவருதாகவே கூறப்படுகின்றது.இந்த
தகவல்களின் உண்மைத் தன்மையினை கண்டறிந்து இதற்கு தடையாக உள்ள காரணிகளை
அகற்றி முள்ளியாவலையில் அரசாங்கத்தால் சட்ட பூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ள
காணியில் எமது குடியேற்றத்தை மேற்கொள்ளுவதற்கு உதவி செய்யுமாறு தங்களிடம்
அன்பாக வேண்டிக் கொள்கின்றோம்.
நன்றி

Post a Comment