சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபிக்கும் 17வது அரசியலமைப்புத் திருத்தச்
சட்டத்தை மீண்டும் கொண்டு வந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து
கொள்ளா விட்டாலும், ஐக்கிய தேசியக் கட்சி இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும்
நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில்
தெரிவித்துள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக, ஐக்கிய தேசியக்கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முன்வைத்த யோசனைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை மகிழ்ச்சியளிக்கக் கூடிய பதிலை வழங்காததும், தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளாமைக்கான ஒரு காரணமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு, ஆளும் கட்சியின் கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன பதிலளித்த போது, குறுக்கிட்டு கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறியுள்ளார்.

Post a Comment