பேரினவாதம் தலை விரித்தாடியபோது ஒவ்வொரு
முஸ்லிமின் உணர்வும் கொதித்தெழுந்தது. யார் வருவார்? எமக்காக யார் குரல்
கொடுப்பார் என ஏங்கித் தவித்தது. வாக்களித்து நாடாளுமன்றுக்கு அனுப்பிய
அமைச்சர் பெருமான்கள் எதையாவது செய்ய மாட்டார்களா? நாடாளுமன்றத்தில்
யாராவது பேச மாட்டார்களா என்றெல்லாம் தவித்தது.
அப்போதெல்லாம் முஸ்லிம் சமூகத்தின்
கெளரவத்தைத் தூக்கி நிமிர்த்த ஒலித்த குரல் அஸாத் சாலியுடைய குரலாகத்தான்
இருந்தது. எதையும் வெளிப்படையாகப் பேசும் குணம், பின் விளைவுகளை விட
நியாயம் ஒன்றே குறியென செயற்படும் வேகம், யாரிடமும் தங்கி வாழ்வதை விட
சமூகத்தை முன் நிறுத்தி செயற்படுவோருடன் இணங்கிச் செல்லும் வழி முறையென
தனக்கென ஒரு தனிப்பாணியில் நாணிக் குறுகிப்போயிருந்த முஸ்லிம் சமூகத்தின்
கெளரவத்தைத் தூக்கி நிறுத்த அஸாத் சாலியின் குரல் ஒலித்தது.
அஸாத் சாலியின் வளர்ச்சியைக் கண்டு
பயந்தவர்கள் இருக்கிறார்கள், விமர்சித்தவர்களும் இருக்கிறார்கள், சொந்தத்
தாய் மாமன் அரசில் இருப்பதைக் கண்டும் இந்த மனிதன் பயப்படவில்லை, தன்
தாயையே இழந்த போதும் கூட சமூகத்துக்காகப் பேச ஒரு நாள் கூடத்
தாமதிக்கவில்லை.
Post a Comment