கடந்த வாரம் அளுத்கம உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபல சேனாவினால் மேற்கொள்ளப்பட்ட கொலை உள்ளிட்ட அடாவடித் தனங்களை கண்டித்தும் மேற்படி குற்றவாளிகளை உடநடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குவதுடன் பாதிக்கப்பட்ட அனைத்து முஸ்லிம்களுக்கும் முழுமையான நஷ்ட ஈடு வழங்கப்படுவதுடன் இனிவரும் காலங்களில் இவ்வாறான அருவருக்கத்தக்க செயற்பாடுகள் இடம்பெறக் கூடாது போன்ற கோரிக்கைளை நிறைவேற்றும் விதத்திலும், முஸ்லிம்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் மேற்படிக் காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட தீய செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று (19) நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்த வகையில் வர்த்தக நிலையங்களை திறக்காதும், போக்குவரத்துக்கள் குறைவடைந்தும் காணப்பட்டதுடன் ஏனைய சேவைகளும் ஸ்தம்பித நிலைகள் காணப்படுகின்றன. இதேவேளை அரச அலுவலங்கள் ஓரளவு இங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மேற்படி ஹர்த்தாலால் மன்னார் மாவட்டத்தலும் ஸ்தம்பித நிலைகள் காணப்படுவதுடன் மன்னார் முசலிப் பிரதேசத்தில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்கள் ஒன்றியங்களும் இணைந்து முசலி பாடசாலைக்கு முன்பாக இருந்து முசலி பிரதேசச் செயலாளர் காரியாலயம் வரை பொதுபல சேனாவுக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்படுத்தியதுடன் பொதுபல சேனாவின் ஞானசார தேரர் உள்ளிட்ட குண்டர்களை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட அனைத்து முஸ்லிம்களுக்கும் பூரணமாக இழப்பீடுகளை வழங்க வேண்டும், இனிவரும் காலங்களில் முஸ்லிம்களுக்கு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக் கூடாது என்றும் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பும் வகையில் அதனை பிரதேசச் செயலாளரிடம் பேரணியில் சென்ற பிரதி நிதிகள் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment