ஒழுங்காக நெறிப்படுத்தப்பட்டு , வார்த்தைப்பிரயோகங்களில் ஒழுக்கம்
கடைப்பிடிக்கப்பட்டால் நேரில் எந்த இடத்திலும் விவாதத்திற்கு முகம்கொடுக்க
முடியும் .
தற்போது தோற்றமேடுத்துள்ள முஸ்லிம் விரோத போக்கு குறித்து பேசப்பட்டாக
வேண்டும் .பெரும்பான்மை சமுகத்த்தினரின் மத்தியில் முஸ்லிம் சமுகத்திற்கு
எதிரான விசமப் பிரச்சாரங்களை விதைக்கும் அணியினரின் விவாதத்திற்கான சவாலை
ஏற்றுக்கொள்கிறேன் .
நடுநிலை வகிக்கும் ஊடகமொன்று , மிகவும் பொருத்தமான மத்தியஸ்தர்களுடன்
நேர்மையாக இவ்விவாதத்தை நடத்த ஒழுங்குகளை மேட்கொள்ளுமாயின் ஞானசாரரின்
சவாலை சந்திக்க தான் தயார் என்று ரவூப் ஹகீம் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாக
பிரபல சிங்கள தினசரியான “ மவ்பிம “ தெரிவித்துள்ளது .
விவாதத்திற்கு அழைப்பு விடுத்திருக்கும் அமைப்பினரின் நடத்தை ,
வார்த்தைப்பிரயோகங்கள் என்பனவற்றை கருத்தில் எடுத்து நோக்கும்போது அவர்கள்
ஒரு நேரடி விவாதத்தின்போது ஒழுக்கசீலர்களாக நடந்துகொள்வார்களா என்கிற பலமான
சந்தேகம் எழுகிறது .
நாட்டின் பெரும்பான்மை முஸ்லீம்களை பிரதிநிதித்துவப் படுத்தும்
கட்சியொன்றின் தலைவர் என்கிற ரீதியில் மிகவும் பொறுப்புணர்வுடனும்
,பொறுமையுடனும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் பிரச்சினைகளுக்கு
முகம்கொடுக்கவேண்டிய கடப்பாடு எனக்குள்ளது . பொய்ப்பிரச்சாரங்களை
முறியடித்ததாக வேண்டும் , அதேவேளை தீவிரவாத நோக்கங்களுடன் , ஒரு இனமுறுகளை
தோற்றுவிப்பதற்கான செயற்பாடுகளில் இறங்கியுள்ள குழுவினருடன் நேரடி மோதலில்
இறங்கும்போது அதன் எதிர்விளைவுகள் குறித்த எச்சரிக்கையுடன் மிகவும்
சாதுர்யமாக நிலைமைகளை கையாள வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது .அதனால்தான்
சங்கைக்குரிய மகாநாயக தேரர்மாரை கண்டியில் சந்தித்து இதுபற்றி விளக்கமாக
பேசியுள்ளேன் .
நன்றி
Post a Comment