அடிப்படை மனித உரிமை மீறலாகவும்
அடாவடித்தனமாகவும் அமைந்த பொது பல சேனாவின் வடரக விஜித தேரர் மீதான அத்து
மீறல் மற்றும் ஊடக சந்திப்பை குழப்பிய சம்பவம் தொடர்பாக பொலிஸ்
திணைக்களம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக
தெரிவித்துள்ளார் அமைச்சர் ரவுப் ஹகீம்.
குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று மாலை
முஸ்லிம் குரல் வானொலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஷேட நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்ததோடு
நீதியமைச்சராக குறித்த சம்பவம் தொடர்பாக தான் கவலையடைவதாகவும்
தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் பொது பல சேனா
அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீது விஜித தேரரினால்
மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவருக்கு பொலிஸ் அழைப்பு
விடுக்கப்பட்டிருக்கின்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment