ஹலால் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு
பொதுபல சேனா அமைப்பு இஸ்லாம் மதம் மற்றும் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொண்டு
வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார் . கொழும்பு மகாவலி
கேந்திர நிலையத்தில் கொழும்பு மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகளை சந்தித்த போதே
அவர் இதனை தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது .
மதம் ஒன்றை அடிப்படையாக கொண்டு இன்னுமொரு
மதத்தை விமர்சிப்பது பொருத்தமற்றது. பொலிஸாரும், நீதிமன்றமும் இதற்கு
எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்
அவர் மேலும் , பொதுபல சேனா அமைப்பின்
செயற்பாடுகள் முஸ்லிம் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுபல சேனா அமைப்புக்கு
எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அரசாங்கத்திற்கு பெரும்
அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
Post a Comment