அம்பாரை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருது மற்றும் ஒலுவில் பிரதேசங்களை
உள்ளடக்கியதாக புதிய பிரதேச சபைகளை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாரை மாவட்டத்தில் கூடுதலான சனத்தொகையைக் கொண்ட சாய்ந்தமருதுக்கு இதுவரை தனியான பிரதேச சபை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சாய்ந்தமருதுக்கான தனிப்பிரதேச சபையை வென்றெடுப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகி தேசிய காங்கிரஸில் இணைவிருப்பதாக கல்முனை மாநகர முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது மக்களின் உரிமைப் போராட்டத்தை முன்னடுத்துள்ள சிராஸின் பின்னால் அப்பிரதேச மக்கள் ஒன்றுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 45 நாட்களுக்குள் கல்முனை மேயரான சிராஸ் நிச்சயம் சாய்ச்தமருதுக்கான தனியான பிரதேச சபையை வெகு விரைவில் வென்று தருவார் என மக்கள் நம்புகின்றனர்.இன்னும் இரண்டொரு தினங்களில் சிராஸ் தேசிய காங்கிரஸில் இணையவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழ் உள்ள ஒலுவில், பாலமுனை, தீகவாபி, அஸ்ரப் நகர் போன்ற பிரதேசங்களை உள்ளடக்கியதான ஒலுவில் பிரதேச சபையும் விரைவில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் திரைமறைவி்ல் நடைபெற்றுவருவதாக கதைகள் கசிந்துள்ளது.
தனித்துவக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் இது தொடர்பாக மாற்றுக்கட்சியின் பெரியவருடன் அம்பாரை நகரில் வைத்து உரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment