கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் விடயத்தில் மிக விரைவில் ஆளும்
தரப்பிற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும்மிடையே ஆதிக்கப் போட்டி
ஆரம்பமாக இருக்கின்றது. நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில்
ஆளும் மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு தனித்து ஆட்சி அமைப்பதற்குத்தேவையான
பெரும்பான்மைப்பலம் கிடைக்கவில்லை.
எப்படியும் கிழக்கின் ஆதிக்கத்தை விட்டுக் கொடுக்க முடியாது என்ற நிலையில்
அது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைத்துக்
கொண்டது.
மு.கா. சொல்லுகின்ற படி இரண்டு வருடங்களுக்கு மட்டுமே நஜீப் அப்துல் மஜீட்
பதவியில் இருக்க முடியும் அடுத்த இரண்டு வருடங்களும் அந்தப் பதவி தமது
தரப்பிற்கு கிடைக்க வேண்டும் இப்படித்தான் உடன்பாடு இருக்கின்றது. என்று
அவர்கள் தரப்பில் சொல்லப்பட்டாலும்.
நஜீப் அப்படி ஒரு உடன்பாடு இருப்பது தனக்குத் தெரியாது என்ற தோரணையில்தான்
கருத்துக்கூறி இருக்கின்றார். உண்மையில் இப்படி ஒரு உடன்பாடு
இருக்கின்றாதா? அந்த உடன் பாட்டில் உள்ள வாசகங்கள்தான் என்ன என்று
மக்களுக்கும் தெரியாது மு.கா.தொண்டர்களுக்கும் தெரியாது.
அப்படி ஒரு உடன்பாடு இருந்தால் இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இந்த
முதல்வார் பதவி மு.காவுக்குப் போய்ச்சேர வேண்டும். என்றாலும் சொன்னபடி
ராஜபக்ச அப்படி நடந்து கொள்வாரா அல்லது கிழக்கு மாகாண சமையில் உள்ள
மு.க.உறுப்பினர்கள் பலரை தன்பக்கத்திற்கு எடுத்து அதன் அதிகாரத்தைத்
தொடர்ந்தும் தப்ப வைத்தக் கொள்ள முனைவாரா என்று தெரிய வில்லை.
விரைவில் ஜனாதிபதித் தேர்தல் என்றால் ஜனாதிபதி இந்த விட்டுக் கொடுப்பைச்
செய்யக்கூடும் அப்படி இல்லாத நிலையில் ஹிஸ்புல்லாஹ்வுக்கு நடந்ததுதான்
மு.காவுக்கும் நடக்கும். எப்டியும் ஆளும் தரப்பினர் இந்த முதல்வர்
விடயத்தில் நல்லதொரு ஆட்டத்தை தொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்.
Post a Comment