Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

புலிகள் முற்றாக அழிக்கப்பட்டத கூறியது பொய்யா ? : அசாத் சாலி

Monday, March 170 comments


   சிவில் கண்கானிப்புக்குழு 15.03.14ல் கொழும்பில் நடத்திய விஷேட செய்தியாளர் மாநாட்டில் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகான சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்த கருத்துக்கள்:  கிளிநொச்சியில் தர்மபுரம் பகுதியில் இந்திய வீடமைப்பு திட்டத்தில தனியாக வசித்து வந்த ஜயகுமாரி என்ற ஒரு தாயும் அவரின் 13வயது மகளும் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புலி சந்தேக நபர் ஒருவர் இந்த வீட்டில் வசித்து வந்ததாகவும் அவரைக் கைது செய்ய முயன்ற போது அவர் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்றதாகவும் அதனை அடுத்தே இந்த வீட்டில் இருந்த தாயையும் மகளையும் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அப்படியானால் புலிகள் இயக்கத்தினர் முற்றாக அழிக்கப்பட்டு விட்டனர் தற்போது அவர்களின் செயற்பாடுகள் நாட்டின் எந்தப் பகுதியிலும் இல்லை என்று அரசாங்கம் அடிக்கடி கூறுவதன் அர்த்தம் என்ன? வடக்கில் இன்னமும் புலிகள் இருக்கின்றனரா அல்லது தமது தேவைக்கு ஏற்ப அரசால் புலிகள் உருவாக்கப்படுகின்றனரா? தப்பிச் சென்றதாகக் கூறப்படும் அந்த புலி உறுப்பினர் எங்கே? அவரை துப்பாக்கியால் சுட்டதாகவும் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். அப்படியாயின் அவர் எங்கே சிகிச்சை பெறுகின்றார். புலிகளின் ஆஸ்பத்திரியும் இன்னும் வடக்கில் உள்ளதா? இந்த மாதிரியான மடத்தனமான பேச்சுக்களைக் கேட்டு பொலிஸாரை மக்கள் எள்ளி நகையாடி வருகின்றனர்.  கைது செய்யப்பட்டுள்ள அந்த பெண்பிள்ளை பருவமடைந்து பத்து நாற்கள் கூட பூர்த்தியாகவில்லை என்று தெரியவருகின்றது.ஏற்கனவே தனது தந்தை மற்றும் உடன்பிறந்த மூன்று சகோதரர்களை பலி கொடுத்துள்ள இந்தச்சிறுமிக்கு எஞ்சியிருந்தது தாயின் ஆதரவு மட்டும் தான். இந்த நாட்டில் உள்ள பிள்ளைகளை எல்லாம் கருணையோடும் தந்தை என்ற உணர்வோடும் பார்ப்பதாகக் கூறும் ஜனாதிபதி இந்த பிள்ளை விடயத்தில் என்ன சொல்லப் போகின்றார்? இவர் இந்த நாட்டின் பிள்ளையாக ஜனாதிபதிக்கு தெரியவில்லையா?. இந்த தாயையும் மகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு நாம் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம். இவர்கள் அரசுக்கு எதிராக சதி செய்யவில்லை. எந்த அரங்கிலும் சாட்சியம் சொல்லவும் இல்லை. தங்களது பிள்ளைகளை கண்டு பிடித்து தருமாறு இந்தத் தாய் டேவிட் கமரூனிடம் ஒரு கடிதம் கையளித்தார். இது குற்றமா? அது அவரின் உரிமை அதற்காக இவ்வளவு பெரிய தண்டனையை அந்த தாய்க்கும் மகளுக்கும் வழங்க வேண்டாம் என்று நாம் கேட்டுக் கொள்கிறோம்.  தமிழ் மக்களை ஏன் பயங்கரவாதிகளாக மாறுங்கள் என்று இந்த அரசாங்கம் மீண்டும் மீண்டும் தள்ளிக் கொண்டு செல்கின்றது? இது போதும் தயவு செய்து இதை இந்த அளவில் நிறுத்திக் கொள்ளுங்கள். எல்லோரையும் இந்த நாட்டின் பிரஜைகளாகக் கருதி நாட்டுக்கு இனிமேலாவது நல்லதை செய்யுங்கள். மக்களுக்கு நல்லதை செய்யாமல்ää மக்களின் உரிமைகளை வழங்காமல் வருடாந்தம் கோடிக்கணக்கில் செலவு செய்து வெற்றி விழாக் கொண்டாட்டஙகளை நடத்துவதில் என்ன பயன்? மக்கள் பிரதிநிதிகள் கூட தமது மக்கள் சார்பாக அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடியாத ஒரு தேசத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்த தேசத்தின் தலைவர்கள் என்று தம்மை கூறிக் கொள்பவர்கள் ஜனநாயகத்தைப் பற்றி வாய் கிழிய மேடைகளில் முழங்குகின்றனர். மக்கள் பிரதிநிதிகளால் கூட தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடியாது என்றால் பிறகு ஜனநாயகத்தைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கின்றது?  எமது பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் நரீன்பிள்ளே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் அப்பட்டமான பொய்களைக் கூறி முழு உலகையும் ஏமாற்றி உள்ளார். சிறுபான்மை சமய வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெற்ற சிறுசிறு ஆத்திரமூட்டல் சம்பவங்களே தவிர இவை எதுவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவை அல்ல. இந்தச் சம்பவங்களைக் கூட அரசாங்கம் கவனிக்காமல் விடவில்லை. இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட எல்லா சம்பவங்கள் பற்றியும் விசாரணைகள் நடத்தப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிரான மஜிஸ்திரேட் விசாரணைகளுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார். இது உலக அரங்கொன்றில் இவர் உரைத்துள்ள அப்பட்டமான பொய்யாகும். நான் அவருக்கு இந்த இடத்தில் சவால் விடுகின்றேன். நீங்கள் ஐக்கிய நாடுகள் அமர்வில் தெரிவித்திருப்பது அப்பட்டமான பொய்யாகும். சமய வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்திய எந்தவொரு நபரும் எந்தவொரு இடத்திலும் இதுவரை கைது செய்யப்படவில்லை. எவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யாரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவும் இல்லை.அப்படியே ஒருவர் இருவரை ஆஜர் செய்தாலும் அவர்கள் இலகுவாக பிணையில் செல்லக கூடிய வகையில் பொய்யான தகவல் அறிக்க
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by