ஒலி பெருக்கி கூட இல்லாத பள்ளிவாசல் ஒன்றை
சமாதானத்துக்கு இடைஞ்சலான இடமாக சித்தரித்து மூடிவிட உத்தரவு
வழங்கியுள்ளது நீதிமன்றம். எனினும், அதற்கெதிரான மனுத்தாக்கல்
செய்யப்போனால் வழக்கத்திற்கு மாறாக மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என
நீதிபதிகளும் பதில் சொல்கின்றனர் என தெரிவித்துள்ளார் மத்திய மாகாண சபை
உறுப்பினர் அசாத் சாலி.
20ம் திகதி பெற்றுக்கொண்ட நீதி மன்றத்
தீர்ப்பை நான்காம் திகதி வரை பொலிசார் மறைத்து வைத்து வெளியிட்ட அதேவேளை
இத்தீர்ப்பே தன்னிச்சையாக எடுக்கப்பட்டிருப்பதாகவும் பள்ளி நிர்வாகம்
சார்பில் யாருக்குமே குறித்த வழக்கில் ஆஜராவதற்கோ சாட்சியமளிப்பதற்கோ
வாய்ப்பு வழங்கப்படவுமில்லை எனக் குறிப்பிட்ட அவர், இந்நிலையில் முஸ்லிம்
அரசியல் வாதிகளோ பாதுகாப்பு செயலாளருடன் தனிமையில் கூட்டம் கூடி
சமூகத்தைக் காட்டிக்கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment