இணையத்தில் தனிப்பட்ட தகவல்களை வெளியிடும் போது எச்சரிக்கை அவசியம் என
பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெண்கள் தங்கள் பற்றிய தகவல்களை
இணையத்தில் பிரசூரிப்பது எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும்.
முகநூலில் பெண்கள் புகைப்படங்களை பிரசூரிக்கும் போது கவனம் தேவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
முகநூல் தொடர்பில் எழும் பிரச்சினைகளின் போது பெற்றோர் மற்றும் ஏனையவர்கள் நிதானத்துடன் செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளர்.
அண்மையில் குருணாகல் பிரதேசத்தில், முகநூலில் புகைப்படங்களை வெளியிட்ட
பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தமை பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment