பசு வதைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தமது அமைப்பின் பௌத்த
பிக்கு ஒருவர் இன்று 18-02-2014 தீக்குளிப்பார் என சிங்கள ராவய அமைப்
அறிவித்துள்ளது.
இன்று காலை பசுவதைப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தெரிவித்துள்ளார்.
பசுவதைக்கு எதிராக பௌத்த பிக்கு தீக்குளித்தால் அதன் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பசுவதை சர்ச்சைக்கு தீர்வு காண எட்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
உணர்வுகளை புரிந்து கொள்ளும் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி. கொழும்பு
நோக்கிய தமது பாத யாத்திரையின் இடைநடுவிலேயே தீர்வு வழங்கியிருக்க
வேண்டும். எனினும், அவ்வாறு சாதகமான தீர்வு எதனையும் ஜனாதிபதி வழங்கவில்லை.
இன்று உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் பெளத்த பிக்கு ஒருவர், பசுவதைக்காக
தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment