பதுளை,
பதுளுப்பிட்டிய மஸ்ஜிதுல் முஜாஹிதீன் பள்ளிவாசலில் ஊவா மாகாண
பள்ளிவாசல்கள் வரலாற்றில் ஒரே இரவில் தராவீஹ் தொழுகையில் 6666 திரு
வசனங்களைக் கொண்ட முழுத் திருக்குர்ஆனை 30 ஜுஸ்களையும் நிறைவு செய்த விசேட
நிகழ்வு கடந்த 13ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8.17 முதல் மறுநாள் ஞாயிறு
அதிகாலை 04.02 மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பெண்களும் உள்ளிட்ட சுமார் 150 பேர்
அளவில் கலந்திட்ட ஊவா மாகாண வரலாற்றுச் சாதனை நிகழ்வை முஜாஹிதீன்
பரிபாலனசபையினர் முதன்முறையாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இரவு 7.55க்கு இஷாத் தொழுகையைத் தொடர்ந்து
ஆரம்பமான இவ்விஷேட தராவீஹ் தொழுகையை 2013 ல் முஸ்லிம் சமய கலாச்சார
திணைக்களம் தேசிய ரீதியில் நடாத்திய ஹிப்ழ் குர்ஆன் மனனப் போட்டியில்
முதலிடத்தை சவீகரித்து வரும் இவ்வருடம் நோன்பு 20 ல் எகிப்தில் நடைபெறள்ள
சர்வதே குர்ஆன் ஹிப்ழ் போட்டியில் பங்குபற்றத் தெரிவாகியுள்ள அட்டலுகம
ஜாமியா இனாமுல் ஹஸன் கிதாப் பிரிவு மாணவருமான பதுளுப்பிட்டிய துவான் ரஷீத்
முஹம்மத் யாஸீர் (இனாமி) ஹாபிஸ் நடத்தினார்.
தனியொரு (வரால்) ஹாபிஸால் தராவீஹ் இவ்வாறு
நடாத்தப்பட்ட ஊவாவின் சரித்திர சாதனை விசேட நிகழ்வு இதுவென்பது
குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
பதுளுப்பிட்டிய பிரதம இமாம் இர்ஷாத்
ஹாபிஸ் தலைமையில் யாஸீர் ஹாபிஸின் சகோதரர் சுஜப் ரஷீத், (தஸ்கரி) 2012 ல்
தேசிய மீலாத் விழாவில் தங்கப் பதக்கம் வென்றெடுத்த அல் அதான் மாணவன்
இல்ஹாருல் ஹக்கின் சகோதரர் உமைர் அப்துல் ரகுமான் மூவரும் குர்ஆன்
பார்வையாளராக பங்களித்தனர்.
ப/பதுளுப்பிட்டிய மொ/அலுப்பொத்த துவான்
ரஷீட் தம்பதியின் இளைய புதல்வரான ஹாபிஸ் யாஸீர் 2009 இல் பாரி மத்ரஸாவின்
தேசிய திருக்குர் ஆன் போட்டியில் முதலிடம் பெற்று உம்ராவுக்கான பரிசினையும்
கொழும்பு ஹைஹத்துல் குர்ஆன் நிறுவனம் இரு தடவை நடத்திய தஜ்வீத் நூல் மனனப்
போட்டி (2011), தப்ஸீர் விரிவுரை குர்ஆன் மனனப்போட்டி (2012) லும் தேசிய
ரீதியில் முதலிடத்தை சுவீகரித்தவர்.
Post a Comment