
பண்டைய இந்திய மன்னன் அஜசாத்
தன்னைச்சுற்றி இருந்த அனைத்து சிற்றரசர்களுக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்தி
தன்னை உறுதி செய்து கொண்டது போல எதிர்க்கட்சிக்குள் பிளவுகளை உருவாக்கி
பலவீனப்படுத்துவதன் மூலம் தன்னை பலசாலியாக மாற்றிக்கொள்ள முயற்சிப்பதாக
தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
யுத்த காலத்தை விட தற்போதே நாட்டு மக்கள் பொருளாதார பிரச்சினைகளை
சந்தித்து வருவதாகவும் வாழ்க்கைத் தரம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தொடர்
தோல்வியால் கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்குள் கருத்து
முரண்பாடுகளைத் தவிர்க்க தலைமைத்துவக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளமையும்
மூத்த தலைவர்களுள் ஒருவரான சஜித் பிரேமதாச விலகியிருக்கின்றமையும்
குறிப்பிடத்தக்கது.
Post a Comment