முன்னாள் கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபிற்கு
அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதத்தில் தற்போதைய முதல்வரின் செயற்பாடுகள் அமைவதாக
தெரிவிக்கப்படுகிறது.
சிராஸ் மீராசாஹிப் முதல்வராக இருந்தபோது பாவித்த
முதல்வர் அலுவலகம் சரியான முறையில் ஆணையாளரிடம் பொறுப்புக் கொடுப்பதற்கு முன்னதாகவே
ஹவால் பிடித்த எடுபிடியினால் ஆக்கிரமிக்கப்பட்டதாக அறியவருகின்றது.
முதல்வர் பதவியினை கடந்த நவம்பர் 8ஆம் திகதி வெள்ளிகிழமை
11.45 மணியளவில் சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து
மாநகர சபை ஆணையாளரினால் முதல்வரின் அலுவலகம் பூட்டப்பட்டது.
புதிய முதல்வரின் எடுபிடி முதல்வர் அறையின்
திறப்புக்களை ஆணையாளரிடமிருந்து பெற்றுக் கொண்டு கடந்த நவம்பர் மாதம் 11, 12 ஆகிய
தினங்களில் முதலவர் அறையில் இருந்த திரைச் சீலைகளை கழுவுதல் மற்றும் சுவர்களுக்கு
வர்ணம் பூசுதல் போன்ற வேலைகளை செய்துள்ளார். இவ்வாறு சனி, ஞாயிறு உள்ளடங்கலாக இராஜினாமா
செய்த நான்கு நாட்களின் பின்னர் 13.11.2013 ஆந்திகதி புதன்கிழமை முதல்வர் அறையில்
இருந்த (இன்வென்றி) பொருட்களை குறித்த எடுபிடியே திறந்து பாரம் கொடுத்துள்ளார். இது
எவ்வாறு இருக்கிறது?.
அலுவலக நடைமுறைகளைப் பின்பற்றி பொருட்கள்
ஆவணங்கள் யாவும் முறையாக ஒப்படைக்கப்பட்ட பின்னரே புதிய முதல்வர் அவ்வலுவலகத்தை பாரம் எடுக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை. ஆனல்
புதிய முதல்வரின் எடுபிடி ஏதோ ஒரு வெற்றிக் களிப்பில் மமதை தலைக்கேறியவன்போல்
செயற்பட்டு அலுவலக திறப்புகளை பெற்று புதிய முதல்வர் நிசாம் காரியப்பர் 18.11.2013
திங்கட்கிழமை உத்தியோக பூர்வமாக கடமையினை பொறுப்பேற்பதற்கு முன்னராக அலுவலக
திருத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் முதல்வர் அலுவலகத்தில் இருந்த
பொருட்களுக்கு யார் பொறுப்புக் கூறுவது. இவர்கள் இவ்வாறு நடந்து கொண்டது பாரிய
தவறாகும். ஆணையாளரும் எடுபிடியின் அதட்டுதலுக்கு பயந்து திறப்புக்களை
கொடுத்துள்ளார்.
ஆணையாளரும் என்ன செய்வது அவர் முதல்வரை சார்ந்தே
செயற்படவேண்டும், இல்லாவிட்டால் நியாயமாக செயல்படுவதற்கான பலம் இருக்கவேண்டும்.
என்னதான் செய்வது தனது தலை விதியென ஆணையாளரின் செயல் அமைகின்றது.
தற்போது முதல்வர் அலுவலகத்தில் இருந்த கணணியின்
ஹார்ட்டிஸ்க்கை காணோம் அதைக் காணோம் இதைக் காணோம் என வீண் பழி சுமத்த
விழைகின்றனர்.
பிரதி முதல்வரின் அறைக்கு முன்னால்
பொருத்தப்பட்டிருந்த “பிரதி முதல்வர்” என்ற பெயர் பலகையினையே உடைத்து வீசினார்கள்.
பின்னர் “நாங்கள் அவ்வாறு செய்யவில்லை, பிரதி முதல்வர் அறையினை வழங்குமாறு ஆணையாளருக்கு
கடிதம் மூலம் அறிவித்துள்ளோம் அதன் பிரதியினை தலைவர் றவூப் ஹக்கீமுக்கு அனுப்பி
உள்ளோம்” எனத் தெரிவிக்கின்றனர். தலைவருக்கு பிரதி அனுப்பியதற்கான காரணம் என்ன?.
தலைவர் இதுவிடயமாக கேட்டுள்ளார் என்பதுதானே. விடயம் பெரிதானதும் சமாளிக்கின்றனர்.
இவ்வாறுதான் தாங்கள் செய்வதையெல்லாம் நியாயித்துக் கொண்டிருக்கின்றனர். யார் தான்
தான் செய்தது தவறு எனக் கூறுவான்.

Post a Comment