நான் ஒன்றும் சின்னப் பிள்ளை இல்லை எனத் தெரிவித்த கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப், சிலர் தன்னைக் கட்சியிலிருந்து வெளியேற்ற மேற்கொண்ட சதிகள் பற்றி தான் நன்கு உணர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
முஸ்லிம் காங்கிரஸிலிருந்து உங்களை கழற்றி எடுக்க வேறு முஸ்லிம் கட்சிகள் முயற்சித்ததாகச் சொல்கிறார்களே என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சிராஸ் மீராசாஹிப் மேயர் பதவியை இராஜினாமாச் செய்தமை தொடர்பில் அறிவிக்கும் ஊடகவிளலாளர் மாநாடு இன்று மாலை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோத அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சிராஸ் மீராசாஹிப் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,
இந்த விடயத்தைப் பயன்படுத்தி என்னைக் கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற சதித்திட்டத்தோடு இரண்டு அல்லது மூன்று பேர் நாடகமாடியிருக்கிறார்கள் என்பது எனக்கு இப்போது புலனாகின்றது. அதனால்தான் அவர்களது சதிகளுக்குள் சிக்கி விடக் கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்தேன்.
இந்த முடிவின் பின்னணியில் எந்தவித அழுத்தங்களும் இல்லை. சுயமாக நன்கு சிந்தித்ததன் பின்னரே இந்த முடிவுக்கு வந்தேன். 31 ஆம் திகதி வரை நான் கால அவகாசம் கோரியிருந்தேன். இருப்பினும் 1 ஆம் திகதி தலைவர் அதிரடியாக சில அறிவித்தல்களை விடுத்தார். கட்சியின் தலைவர் என்ற வகையில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான அதிகாரம் அவரிடம் இருக்கிறது. அதனை நான் மதிக்கிறேன்.
கடந்த ஒரு வார காலமாக கட்சியின் தலைவருடனும் ஏனைய முக்கியஸ்தர்களுடனும் தொடர்ச்சியாக பல தடவைகள் நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் கலந்துரையாடியதன் பிற்பாடே இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளேன். வௌ்ளிக் கிழமை நல்ல நாள் என்பதால்தான் நேற்று தலைவரைச் சந்தித்து இராஜினாமாக் கடிதத்தை கையளித்தேன்.
நான் அரசியலுக்குள் பிரவேசித்து 45 நாட்களுக்குள் மேயராக தெரிவானவன். கடந்த 2 வருட பதவிக் காலத்துக்குள் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் முடியுமான பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ளேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment