கல்முனை மேயராக இதுகாலவரையும் பதவிவகித்துவந்த சிறாஸ் மீராசாஹிப் தனது
ராஜினாமா கடிதத்தை கையளிப்பதற்காக இன்று வெள்ளிக்கிழமை 08-11-2013 அன்று
ரவூப் ஹக்கீமின் வீட்டிற்கு சென்றவேளையில் இருவரும் உணர்ச்சி
பொங்கியவர்களாக ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுதுள்ளனர்.
இதனை சிறாஸ் மீறாசாஹிப் குறிப்பிட்டார்.
அதேவேளைமுஸ்லிம் காங்கிரஸிலிருந்து தன்னை வெளியேற்றுவதற்கு அம்பாறை மாவட்ட
முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் சிலர் சதி செய்வதாக கூறிய சிறாஸ்,
அமைச்சர் ரவூப் ஹக்கீமிடமிருந்து தமக்கு பல வாக்குறுதிகள்
கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் நேரடி பிரதிநிதியாக ரவூப் ஹக்கீம் தம்மை
நியமிக்கவுள்ளதாகவும், தொடர்ந்தும் மக்களுக்கான தனது சேவைகள் தொடருமெனவும்
அவர் தெரிவித்தார்.
Post a Comment