இன்று காலை கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமைச் சந்தித்த சிராஸ்
மீராசாஹிப் தனது இராஜினாமாக் கடிதத்தை கையளித்ததாகவும் இருவரும்
ஒருவரையொருவர் கட்டித் தழுவி முஸாபஹா செய்து கொண்டதாகவும்
தெரியவருகிறது.
இது தொடர்பில் இன்று பிற்பகல் கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகமான
தாருஸ்ஸலாமில் இடம்பெறவுள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்
விரிவாக விளக்கமளிக்கப்படும் என கட்சியின் ஊடகப் பிரிவு
தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் சாய்தமருதில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் சிராஸ்
மீராசாஹிப் தொடர்ந்தும் மேயராக பதவி வகிப்பார் என தீர்மானம்
நிறைவேற்றப்பட்டிருந்தது. இருப்பினும் நேற்று வியாழக்கிழமை வெ
ளியான விடி வௌ்ளி பத்திரிகைக்கு கருத்து வெ ளியிட்ட சிராஸ்
மீராசாஹிப் தான் ஒருபோதும் மேயர் பதவியை இராஜினாமாச் செய்ய முடியாது
எனக் கூறவில்லை எனவும் கால அவகாசமே கோரியிருந்ததாகவும்
குறிப்பிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
Post a Comment