
ராஜபக்ஷ தலைமையில் தரகு பண கொள்ளைக்கு மத்தியில் அனேகமான அமைச்சர்கள் பாதிப்படைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த அமைச்சர்கள் அரசாங்கத்தின் ஊழல் குறித்து எதிர்கட்சிக்கு தகவல் வழங்கிக் கொண்டிருப்பதாக கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
முன்னிலை வகிக்கும் அதிகாரிகள் ரயில் மற்றும் தெற்கு அதிவேக வீதிகளில் பாரியளவு ஊழலில் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென் மாகாண சபையில் உள்ள டிவி. உபுல் என்பவர் ராஜபக்ஷவின் கைபொம்மையாக மாறியுள்ளதாகவும் தென் மாகாண சபை ஊழல் களஞ்சியமாக மாறியுள்ளதெனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.
இது குறித்து எதிர்கட்சி தகவல் திரட்டி வருவதாக அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கயஸ்தர்கள் செல்ல இடமின்றி தவிப்பதாக மங்கள தெரிவித்துள்ளார்.
Post a Comment