
முஸ்லிம்களின் ஹஜ் கடமையான குர்பான்
விடயத்தில் முஸ்லிம்கள் இடையூறுயின்றி தமது கடமைகளைச் செய்ய இடமளிக்க
வேண்டும் என்று அரச உயர் அதிகாரிகளுக்கும் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கும்
மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகெடுவ பணிப்புரை விடுத்துள்ளதாக முன்னாள்
மத்திய மாகாண சபை உறுப்பினரும் ஆளுநரின் இணைப்பதிகாரியுமான ரிஸ்வி பாரூக்
தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகெடுவ
தலைமையில் ஆளுநர் பணிமனையில் முஸ்லிம்கள் ஹஜ் கடமையில் குர்பான் கொடுப்பது
தொடுபாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக் முன்வைத்த
வேண்டுகோளுக்கிணங்க விசேட கூட்டம் இன்று 02 -10 -2013 நடைபெற்றது.
இந்நிகழ்வில் கண்டி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும்
உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய
மாகாணத்தில் இது தொடர்பாக எங்கேயாவது பிரச்சினைகள் ஏற்படுமாயின் ஆளுநரின்
இணைப்பதிகாரியும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக்கிடம்
தொடர்பு கொள்ளுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர்
தெரிவித்தார்.
தொடர்பு கொள்ள விரும்புவோர் 0777912441 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
Post a Comment