முன்னாள்
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்வரும் ஜனவரி மாதம் முதல்
மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல்
கொள்கைகளை மீண்டும் சமூகமயப்படுத்த முன்வர வேண்டும் என அரசாங்கத்தின்
முக்கிய அமைச்சர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் கோரிக்கை
விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தாங்கள் மீண்டும் அரசியலுக்கு வரும் பட்சத்தில் தமது ஆதரவு முழுமையாக கிடைக்கும் என்றும் அவர்கள் சந்திரிகாவிடம் உறுதியளித்துள்ளனர்.
இதனை சாதகமாக பரிசீலித்துள்ள சந்திரிகா
ஜனவரி மாதம் முதல் இலங்கையில் தங்கியிருந்து அரசியல் நகர்வில் ஈடுபடுவார்
என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment