கல்முனை மாநகர மேயர் பதவியை சிராஸ் மீராசாஹிப் ராஜினாமா செய்யக் கூடாது என அவரது ஆதரவாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
இன்று இரவு மேயரின் சாய்ந்தமருது இல்லத்தில் மேயர் சிராஸ் தலைமையில் நடை பெற்ற அவசர கூட்டத்தில் ஒன்றுகூடிய அவரது ஆதரவாளர்கள் இதனை நாரே தக்பீர் கோஷத்துடன் பிரகடனம் செய்துள்ளனர்.
சாய்ந்தமருது பிரதேசத்திற்கு கிடைத்த மேயர் பதவியை இடை நடுவில் பறிப்பதற்கு இடமளிக்காமல் தொடர்ந்தும் அப்பதவியை சிராஸ் மீராசாஹிப் அவர்களே வகிக்க வேண்டும் என்று அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுழற்சி முறை உடன்பாட்டின் பிரகாரம் மேயர் பதவியை ராஜினாமா செய்யுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம், நேற்று மேயர் சிராசை நேரடியாக அழைத்து உத்தரவிட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று இக்கூட்டத்தை நடாத்தி ஆதரவாளர்களினால் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
இணைப்பு: நேற்றைய செய்தி
கல்முனை மேயர் பதவியை ராஜினாமா செய்யுமாறு சிராஸுக்கு ரவூப் ஹக்கீம் பணிப்பு!
சுழற்சிமுறை இணக்கப்பாட்டின் பிரகாரம் கல்முனை மாநகர மேயர் பதவியை ராஜினாமா செய்யுமாறு மேயர் சிராஸ் மீராசாஹிபுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபிற்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை நீதி அமைச்சில் இடம்பெற்ற போதே மேயர் பதவியை ராஜினாமா செய்யுமாறு தலைவர் பணித்துள்ளதாக மு கா.வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற கல்முனை மாநகர சபை தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளை சாய்ந்தமருதைச் சேர்ந்த சிராஸ் மீராசாஹிபும் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை கல்முனைக்குடியைச் சேர்ந்த கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகமான சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் பெற்றிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மேயரை நியமிக்கும் விடயத்தில் பாரிய சர்ச்சை தோன்றியது. சாய்ந்தமருதில் பாரிய ஆர்ப்பாடங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து சுழற்சிமுறையில் மேயர் பதவியை பகிர்ந்து வழங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் தீர்மானித்தது.
இதன் பிரகாரம் முதல் இரு வருடங்களுக்கு சிராஸ் மீராசாஹிபும் அடுத்த இரு வருடங்களுக்கு சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் மேயராக பதவி வகிப்பார்கள் என கட்சி அறிவித்தது. இதனால் அப்போது இப்பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டது.
இந்த தீர்வின் பிரகாரம் சிராஸ் மீராசாஹிப் மேயராக பதவியேற்று இம்மாதம் 10ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது.
இந்த நிலையிலேயே அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது மேயர் பதவியை ராஜினாமா செய்யுமாறு தலைவர் ஹக்கீம் பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தானே அடுத்த இரு வருடங்களுக்கும் மேயராக பதவி வகிக்க விரும்புவதாகவும் அதனையே சாய்ந்தமருது மக்கள் விரும்புவதாகவும் மேயர் சிராஸ் தலைவர் ஹக்கீமிடம் தெரிவித்துள்ளார்.
“இல்லை அது முடியாது, உங்களுக்கு பதவி தரப்படும் போது இணக்கம் காணப்பட்டதன் பிரகாரம் நீங்கள் ராஜினாமா செய்தேயாக வேண்டும்- சுழற்சி முறை இணக்கப்பாட்டை மீற முடியாது- கட்சி, மற்ற தரப்பினருக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கிறது” என தலைவர் ஹக்கீம் கூறியுள்ளார்.
சரி, நான் எனது ஆதரவாளர்களுடன் கலந்து பேசி விட்டு எனது முடிவை சொல்கிறேன் என மேயர் சிராஸ் இதன்போது தெரிவித்துள்ளார்.
எது எப்படியாயினும் நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்கின்ற கட்சியின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று தலைவர் ஹக்கீம் இதன்போது உறுதியாகத் தெரிவித்தார் என்று கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Post a Comment