Homeநோன்பை கழாச் செய்ய வேண்டுமா, இல்லையா? ஜம்மியத்துல் உலமா கொடுத்த பத்வாவின் முடிவு!
நோன்பை கழாச் செய்ய வேண்டுமா, இல்லையா? ஜம்மியத்துல் உலமா கொடுத்த பத்வாவின் முடிவு!
Navemani
ஜம்மியத்துல் உலமா தனது பத்வாவை யார் மீதும் தினிப்பதில்லை. ஆனால், பிறை
விவகாரம் அப்படிப்பட்டதல்ல என்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத்
தலைவர் அஷ்ஷெய் ரிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார்.
தலைப்பிறை பார்ப்பதிலுள்ள சிக்கல்களை தீர்க்கும் பொருட்டு நடைபெற்ற கருத்துகள மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த ஷவ்வால் தலைப்பிறை காண்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக 29
நோன்புகளை முடித்துக்கொண்டு வியாழக்கிழமை பெருநாள் கொண்டாடியவர்கள் நோன்பை
கழாச் செய்ய வேண்டுமென ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய் ரிஸ்வி
முப்தி பத்வா (மார்க்கத் தீர்ப்பு) விடுத்திருந்தார்.
கிண்ணியாவில் பிறை கண்டதை ஜம்மியத்துல் உலமா ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் பெருநாள் கொண்டாடியது
சரியென அறிவித்துள்ள நிலையில் இந்த பத்வா (மார்க்கத் தீர்ப்பு)
செல்லுபடியாகுமா இல்லையா என்ற சந்தேகம் இன்றும் மக்கள் மனதில்
எழுந்துகொண்டுதான் இருக்கிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ரிஸ்வி முப்தி, ஜம்மியத்துல் உலமா
யார்மீதும் பத்வாவை திணிப்பது இல்லை. ஆனால், பிறை விவகாரம்
அப்படிப்பட்டதல்ல. பிறைக்குழு தீர்மானத்தின்படி பிறை கண்டநாளில்
ஜம்மியத்துல் உலமாவும் கொழும்பு பெரிய பள்ளிவாசலும் சேர்ந்து
நிராகரித்துவிட்டால், பிறை கண்டவர்கள் எத்தனை பேர்கள் என்றாலும் சரி
அவர்கள் நோன்பு பிடிக்கத் தேவையில்லை.
பிறை பார்த்தது நிராகரிக்கப்பட்டால், இவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று
அர்த்தமல்ல. பிறையைக் கண்டவர்களைத் தவிர, வேறு யாரும் அந்த நாளில் நோன்பு
பிடிக்காமல் இருக்கமுடியாது. இதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.
பிறைக்குழு தீர்மானத்தின்படி இது ஜம்மியத்துல் உலமாவும், கொழும்பு பெரிய
பள்ளிவாசலும் சேர்ந்து எடுத்த முடிவாகும்.
இமாம் ஷாபி (ரஹ்) அவர்களின் கருத்துப்படி பிறை கண்டதை யார்
உறுதிப்படுத்துகிறார்களோ அவர்களும் அன்றையதினம் நோன்பு பிடிக்கத்
தேவையில்லை.
இதனை ஆதாரமாக வைத்துத்தான் கிண்ணியாவில் பெருநாள் கொண்டாடியது
சரியென ஜம்மியத்துல் உலமா அறிக்கை விடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment