
ஹிஸ்புல்லா, பௌசி, காதர் போன்ற
அமைச்சர்கள் தமது மதத்தை விற்று பிழைப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின்
மத்திய மாகாண சபை வேட்பாளர் அசாத் சாலி தெரிவித்தார். அவர் மேலும்
தெரிவிக்கையில் , மாகாண சபைத் தேர்தல் நடைபெறும்
பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் கிராமங்களுக்கு சென்று இனவாத்தை தூண்டி
வாக்குகளை பெற இந்த முஸ்லிம் அமைச்சர்கள் முயற்சித்து வருகின்றனர்.
அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட குழுக்கள் முஸ்லிம் பள்ளிவாசல்கள்,
வணக்கஸ்தலங்கள், முஸ்லிம் வர்த்தக நிலையங்களை தாக்கியமை சம்பந்தமாக
ஆதாரங்களுடன் ஒப்புவிக்கப்பட்டது.
ஆனால் இந்த அமைச்சர்கள் பொய் பிரசாரங்களை
முன்னெடுத்து வருகின்றனர். பௌசி, காதர் போன்ற அமைச்சர்கள் முஸ்லிம்
பள்ளிகளுக்கு சென்று எவராவது பள்ளியை தாக்கினார்களா என்று தற்போது
விசாரித்து வருகின்றனர். அப்படியான சம்பவங்களை தாம் அறியவில்லை
என்கின்றனர். எனினும் தம்புள்ளை பள்ளிவாசலுக்கு இந்த அரசாங்கம் செய்த
கொடுமையை இவர்கள் அறிந்துள்ளனர். இதற்கு முன்னர் அரசாங்கம் செய்தவைகளை சீடி
ஆதாரங்களுடன் வழங்கியுள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கைகளும்
எடுக்கப்படவில்லை.
இன்று இந்த முஸ்லிம் அமைச்சர்கள் தமது
மதத்தை விற்றாவது பணத்தை சம்பாதிக்கும் நிலைமைக்கு சென்றுள்ளனர் என்றார்.
மத ரீதியான வன்முறைகள் முழு சமூகத்தையும் காயப்படுத்தும்: ஐ.தே.க மத
வழிப்பாட்டு தலங்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, இது இலங்கையில் உள்ள முழு
சமூகங்களின் உணர்வுகளையும் காயப்படுத்தும் எனவும் கூறியுள்ளது.
அண்மைய காலமாக நாட்டில் அதிகரித்து வரும்
மத சம்பந்தமான பதற்றங்கள் தன்னையும் தமது கட்சியில் உள்ள மற்றவர்களையும்
கவலையடைய செய்திருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்
கரு ஜயசூரிய தெரிவித்தார். இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர்
நாட்டில் நீண்டகாலமாக பிளவுப்பட்டிருந்த சமூகங்களை ஒன்றிணைத்து ஒன்றாக
வாழும் சூழலை ஏற்படுத்தி அவர்களின் துயரங்களை துடைத்து, நல்லிணக்கத்துடன்
கூடிய அனைவரும் ஒரு நாட்டு மக்கள் என்ற வகையில் புதிய இலங்கையை உருவாக்க
வேண்டும்.
நாட்டில் மீண்டும் இன, மத ரீதியான
பிளவுகளை ஏற்படுத்தினால் நாடு மீண்டும் பள்ளத்தை நோக்கி செல்லும். இன, மத
வாத பிரச்சினைகளால் நாட்டில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களையும் துயரங்களையும்
ஒரு முறை சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார்
Post a Comment