Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

வரலாறு படைத்த நிகழ்வு; பண்டாரநாயக்க விமான நிலையத்தில் குத்பா, ஜும்ஆ தொழுகை!

Saturday, September 140 comments


P1330089

இவ்வருட புனித ஹஜ் கடமைக்கான ஹாஜிகளை ஏற்றிய முதலாவது பயணிகள் விமானம் நேற்று வெள்ளிக்கிழமை இலங்கையில் இருந்து புனித மக்கா நோக்கி பயமானது.

இவ்ருடம் இலங்கையில் இருந்து 2240 ஹாஜிகள் ஹஜ் கடமையை நிறைவேற்ற சவுதி அரசாங்கத்தால் அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் பிரகாரம் முதல் தொகுதியில் சுமார் 75 ஹாஜிகளை ஏற்றிய சிறிலங்கன் விமானம் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவுதி அரேபியா நோக்கிச் சென்றது.

மேற்படி வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல், பிரதிப்பணிப்பாளர் றபீக் இஸ்மாயில், உதவிப் பணிப்பாளர் நூறுல் அமீன், ஹஜ் குழு உறுப்பினர் இக்பால், சவுதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவராலயத்தின் விசா அலுவலர் மிசாறி அல்-தியாபி, விசா அலுவலரின் பிரத்தியோக செயலாளர் ஐ.எல்.எம்.மாஹிர் உட்பட திணைக்கள அதிகாரிகளும் ஹஜ் முகவர்களும் கலந்து கொண்டிருந்தனர்

இதன்போது சவுதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவராலயத்தின் விசா அலுவலர் மிசாறி அல்-தியாபி ஹாஜிகளுக்கு பயனத்தின் போதும் ஹஜ்ஜின் போதும் நடந்து கொள்ளும் விதங்கள் பற்றி விளக்கமளிப்பதையும் வெள்ளிக்கிழமை என்பதால் வரலாற்றில் முதல் முதலாக விமான நிலையத்தின் பிரதான பகுதியில் ஜூம்ஆ பிரசங்கமும் தொழுகையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி ஜூம்ஆ பிரசங்கத்தையும் தொழுகையையும் ஹாஜிகளை வழி நடத்திச் செல்லும் மௌலவி உமர்தீன் நிகழ்த்தியதுடன் அமைச்சர் பௌசி, திணைக்கள அதிகாரிகள், விமான நிலைய குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் விமான நிலையப் பொறுப்பாளர் மன்சூர் உட்பட முஸ்லிம் அதிகாரிகள் மற்றும் ஹஜிகளும் கலந்து கொண்டனர்.

ஜூம்ஆவுக்கான ஏற்பாடுகளை விமான நிலைய பெரும்பான்மை இன அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஏற்பாடு செய்து கொடுத்ததுடன் அமைதியாக ஜூம்ஆவை அவதானித்தமையும் அதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கதுடன் அவர்களுக்கு அனைவரும் நன்றியும் தெரிவித்தமையும் விஷேட அம்சமாகும்.
P1330095P1330099 P1330105
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by