Homeவடக்கு வெற்றி: அடக்கி வாசிக்கும் பொதுபலசேனா!
வடக்கு வெற்றி: அடக்கி வாசிக்கும் பொதுபலசேனா!
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ்தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசின் ஒழுங்குப்பத்திரத்திற்கு அமைவாக நடக்கிறதா என்பதை அவதானித்தேதமது அடுத்த கட்ட நடவடிக்கை அமையும் என்று சிங்களக்கடும்போக்குவாத அமைப்பான பொதுபலசேனாதெரிவித்துள்ளது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் ஆயிரம்பிக்குகள் தீக்குளிப்பார்கள் என்று எச்சரித்திருந்த பொதுபலனோ13ஆவது திருத்தச்சட்டத்தில் காணி காவல்துறைஅதிகாரங்களை நீக்க வேண்டும் என்றும் கூறி இனவாதஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
இந்நிலையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதன் பின்னர் மௌம் காத்துவந்த பொதுபலசேனா தற்பொழுது இந்தியா அல்லதுசர்வதேசத்தின் ஒழுங்குப் பத்திரத்திற்கு அமைவாககூட்டமைப்பு செயற்படுகிறதா என்று அவதானிப்பதாகதெரிவித்தது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொதுபலசேனாஅமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசேகரதேரர் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைகைப்பற்றும் என்று தாம் முன்பே அறிந்தது என்றும்குறிப்பிட்டது.
தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ் தேசியக் கூட்டமைப்புஇனவாதத்தை முதன்மைப்படுத்தியே தனது பிரசாரநடவடிக்கைகளில் ஈடுபட்டது என்றும் இனவாதத்தை வைத்தேகூட்டமைப்பு வெற்றி பெற்றது என்றும் அவர்குற்றம்சாட்டியுள்ளார்
Post a Comment