
பெருந்தலைகள் ரவுப் ஹகீம், பைசர் முஸ்தபா,
ஹலீம் போன்றவர்களால் கூட இத்தனை விருப்பு வாக்குகளைப் பெற முடியவில்லை.
கொழும்பிலிருந்து சென்று இந்த எலி என்ன செய்யும்? எங்கும் வெல்ல முடியாது
என்றெல்லாம் மூத்த அமைச்சர்கள் கூறினார்கள். ஆனால் நான் அல்லாஹ்வை
நம்பினேன், மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் பாசத்தையும்
நம்பினேன்.
அதன் பயனாக இன்று அதி கூடிய விருப்பு வாக்குகளுடன் நிறைந்த மன
மகிழ்வுடன் எனக்காக வாக்களித்த ஒவ்வொருவருக்கும் என் நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறேன் என மத்திய மாகாணத்தில் 55,000 க்கும் அதிகமான
விருப்பு வாக்குகளோடு வெற்றியீட்டிய நிலையில் அஸாத் சாலி சோனகர்.கொம்முடனான
பிரத்யேக நேர்காணலின் போது தெரிவித்தார்.
சற்று முன்னர் உரையாடிய அவர் மேலும்
தெரிவிக்கையில், அரச தரப்பில் பல அழுத்தங்கள், முடிவுகள் வெளியிடுவதற்கான
தாமதம் என அனைத்தையும் தாண்டி இன்று நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். எனது
சமூகத்துக்கு சேவை செய்யக்கூடிய வாய்ப்பொன்றை இறைவன் எனக்கு
வழங்கியிருக்கிறான். எமது சமூகத்துக்காக தொடர்ந்து குரல்
எழுப்பிக்கொண்டேயிருப்பேன் என தெரிவித்தார்.
எனக்காக வாக்களித்தோர், பிரச்சாரம்
செய்தோர் மற்றும் எனது வெற்றிக்காக பிரார்த்தித்த அத்தனை உள்ளங்களுக்கும்
இந்த வேளையில் சோனகர்.கொம் மற்றும் முஸ்லிம் குரல் ஊடாக தெரிவிப்பதில்
மகிழ்ச்சியடைகிறேன். இன்ஷா அல்லாஹ் விரைவில் முஸ்லிம் குரல் வானொலியூடாக
அனைவருடனும் உரையாட வருகிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த வாரம் (சனிக்கிழமை) தேர்தலுக்குப்
பின்னான மெகா அரசியல் நேரலை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக
முஸ்லிம் குரல் வானொலி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Post a Comment