அரசாங்கம் இனி தான் தோன்றித்தனமாக செயற்பட முடியாது என தமிழ் தேசிய
கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு வடக்கின் அதிக விருப்பு
வாக்குகளை பெற்ற சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நடந்து முடிந்த வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 84.37 வீதமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
அதில் முதலமைச்சர் வேட்பாளரான சி.வி விக்னேஸ்வரன் 1,32 255 விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி ஈட்டியுள்ளார்.
இந்த வெற்றியின் பின்னர் இன்று (22) மாலை 2.30 மணியளவில் யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலையே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண மக்கள் எம்மிடம் பெரும் பொறுப்பை கையளித்து உள்ளனர். அரசாங்கம் இனி தான் தோன்றித்தனமாக செயற்பட முடியாது. இதுவரை காலமும் அவ்வாறான ஒரு அமைப்பு இல்லாதமையின் காரணமாகத் தான் அவற்றை அவர்களால் செய்ய முடிந்தது.
இனி அவ்வாறு செய்ய முடியாது சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே நடக்க வேண்டும். வடக்கு மாகாண சபையின் ஆளுநராக இதுவரை காலமும் முன்னாள் இராணுவ அதிகாரியே இருந்தார்.
இனி சிவில் சமூகத்தை சேர்ந்தவர் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டவர் எம்முடன் இணைத்து செயற்பட கூடிய ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என நாம் விரும்புகின்றோம் என தெரிவித்தார்.
அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில்,
குறிப்பிட்ட அடிப்படையில் ஆட்சி அமைக்கும் அதிகாரம் நீதி, நிர்வாகம், நிதி சம்பந்தமான அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும் இறைமை பகிர்ந்தளிக்க வேண்டும்.
வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாட்டின் அரசியல் சரித்திரத்தில் முன்னேப்பதும் அடையாத வெற்றியீட்டியுள்ளது.
மக்களின் ஜனநாயக தீர்ப்பு மிகவும் தெளிவாக உள்ளது. ஐக்கிய பிளவு படாத நாட்டிற்குள் பாதுகாப்பாகவும் சுய மரியாதையோடும் கௌரவமாகவும் போதிய சுயாட்சி பெற்று வாழ்ந்து தமது நியாயமான அரசியல் பொருளாதார சமூக கலாசார அபிலாசைகளை அடைய விரும்புகின்றனர்.
இந்த இலக்கை அடைவதற்கு நாம் அர்ப்பணிப்போடு செயற்படும் அதேவேளை அரசாங்கம் தனது பங்களிப்பை முழுமையாக செய்யும் என எதிர்பார்க்கின்றோம்.
இந்த பெறுபேறு அனைவரும் ஆரோக்கியமான திசையில் பயணிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை தந்திருக்கின்றது.
தமிழ் மக்கள் தெளிவாகவும், துணிவாகவும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இந்த ஜனநாயக தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என நாம் வற்புறுத்தி கேட்கின்றோம்.
தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை அடைவதற்கு எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என அவர் மேலும் அவர் தெரிவித்தார்.

Post a Comment