
புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட எஸ்.எச்.எம்.நியாஸ் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளார். ஏனைய பெரும்பான்மைக் கட்சிகளில் போட்டியிட்ட எந்த முஸ்லிம் வேட்பாளரும் வெற்றி பெறவில்லை.
இதன்மூலம் முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட முஸ்லிம்களின் கௌரவத்தை பாதுகாத்துள்ளது. பெரும்பான்மையின கட்சிகளின் அடிவருடிகளாக காலம் காலம் தொட்டு சமூகத்தைக் காட்டிக்கொடுத்து வருகின்ற இவர்களுக்கான பரிசு இந்தத் தேர்தலில் கிடைத்துள்ளது.
முஸ்லிம் காங்கிரசோடு இவர்கள் இணைந்து கேட்டிருந்தால் குறைந்தது மூன்று ஆசனங்களை பெற்று முஸ்லிம்களின் தனித்துவத்தை மேலும் அதிகரித்திருக்கலாம். இனியாவது காட்டிக் கொடுக்கும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா?
Post a Comment