யாரையோ காப்பாற்ற பாய்ந்து விழுந்து
ஜம்மியத்துல் உலமாவும் அறிக்கை விட்ட 260 கிலோ ஹெரோயின் பறிமுதல்
விவகாரத்தில் இலங்கையின் மிகப்பெரும் வர்த்தகர்கள் மூவர்
சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள்
எனவும் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பறிமுதல் செய்யப்பட்ட பெருந்தொகை போதைப்
பொருட்களை இறக்குமதி செய்வதில் மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த போலி
முகவரி உபயோகிக்கப்பட்டிருந்த தகவல் ஏற்கனவே வெளியாகியிருக்கும் நிலையில்
தற்போது நாட்டின் பெரும்புள்ளிகள் மூவருக்கு பொலிஸ் வலை
விரிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக கைது
செய்யப்பட்ட பாகிஸ்தானிய பிரஜை இலங்கையர் 10 பேரை தொடர்பு
கொண்டிருந்ததாகவும் எதிர்வரும் வாரம் பாகிஸ்தானிய புலனாய்வுத் துறையும்
இலங்கை பொலிசுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக இலங்கை வருவதாகவும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோத்தபாய ராஜபக்ச இலங்கை முஸ்லிம்களிடம்
தீவிரவாதம் பரவி வருவதாக தெரிவித்த கருத்தை இதுவரை உத்தியோகபூர்வமாக
மறுக்காத ஜம்மியத்துல் உலமா சபை குறித்த விவகாரத்தில் முந்திக்கொண்டு
காரசாரமான அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment