ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸவும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஸவும்
ஒருபக்கம் முஸ்லிம்களுக்கு இப்தார் செய்துகொண்டு மறுபக்கம் பள்ளிவாசல்கள்
மூடப்படுகின்றதையும், அவற்றுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கப்படுவதையும்
வேடிக்கை பார்த்துக்'கொண்டிருப்பதாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர்
ரஹ்மான் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கண்டியில் மஹிந்த ராஜபக்ஸ முஸ்லிம்களுக்கு இப்தார் வைக்கிறார். கொழும்பில்
கோத்தபய ராஜபக்ஸ இப்தார் வைத்துவிட்டார். எங்களுக்கு இப்தார் வைக்கும்படி
முஸ்லிம்கள் கோரவில்லை. பள்ளிவாசல்களை பௌத்தசிங்கள பேரினவாதிகளிடமிருந்து
பாதுகாத்து தாருங்கள், பள்ளிவாசல்களுக்கு எதிராக அச்சுறுத்தல்
விடுப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள் என்றுதான் முஸ்லிம்கள்
குறிப்பிடுகிறார்கள்.
முஸ்லிம்கள் மீதான ராஜபக்ஸ சகோதரர்களின் அணுகுமுறை வேடிக்கையாகவும்,
விநோதமாகவும் உள்ளது. முஸ்லிம்கள் இதுதொடர்பில் விழிப்படைய வேண்டும்.
இப்தார் வழங்கி முஸ்லிம்கள் ஏமாற்றப்படுகிறார்கள். மறுபக்கம் பள்ளிவாசல்கள்
மூடப்படுகின்றன. இதுவா இந்த அரசாங்கத்தின் கொள்கை என கேடவிரும்புகிறேன்.
எனவே அரசாங்கம் பள்ளிவாசல்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தும், முஸ்லிம்களின்
மத உரிமையில் தலையிடுகின்ற சக்திகளை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி
அவர்களுக்கு உரிய தண்டனைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். ராஜபக்ஸ
சகோதரர்களிடமிருந்த இந்நாட்டு முஸ்லிம்கள் இப்தாரையோ, நோன்புக் கஞ்சியையையோ
எதிர்பார்க்கவில்லை. உடனடியாக பள்ளிவாசல்களை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்
என்பதே முஸ்லிம்களின் சார்பில் நான் அரசாங்கத்திடம் விடுக்கும் வேண்டகோள்
என்றார்.
Post a Comment